எச்.வினோத் இயக்கத்தில் தனுஷ் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள வாத்தி திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. அடுத்ததாக அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். கேப்டன் மில்லர் படத்தை அடுத்த ஆண்டு பிற்பகுதியில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் இளன் இயக்கத்தில் ஒரு படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் எச்.வினோத் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. கமல் படத்தை முடித்துக் கொண்டு தனுஷ் படத்தில் எச்.வினோத் இணைவார் என்று தகவல்கள் கூறுகின்றன. துணிவு படத்தை தொடர்ந்து கமல் நடிக்கவுள்ள 233ஆவது படத்தை எச் வினோத் இயக்கவுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் இந்தியன் 2 படப்பிடிப்பு முடிந்த பின்னர் தொடங்கும். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு வாரங்களில் வெளியாகலாம்.