முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » Bala: கடினமான கதை களங்களில் வெற்றிக்கொடி நாட்டிய இயக்குநர் பாலா!

Bala: கடினமான கதை களங்களில் வெற்றிக்கொடி நாட்டிய இயக்குநர் பாலா!

யதார்த்தத்தில் அவருடைய படங்கள் அமைந்ததில்லை. ஆனால் தான் எடுத்துக் கொண்ட வித்தியாச கதை களத்தை பார்வையாளர்களை ரசிக்க வைத்ததே, பாலாவின் வெற்றி.

 • 17

  Bala: கடினமான கதை களங்களில் வெற்றிக்கொடி நாட்டிய இயக்குநர் பாலா!

  வித்தியாசமான உலகத்திற்கு நம்மை அழைத்துச் செல்வதில் முன்னோடியாகத் திகழ்பவர் இயக்குநர் பாலா. சேதுவாக இருந்தாலும் சரி நந்தாவாக இருந்தாலும் சரி, தன் படங்களை நோக்கி அனைவரின் கவனத்தையும் திருப்பும் தனித்துவமான திறனை வெளிப்படுத்தினார். நம்மில் பலருக்கும் தெரிந்த வகையில், யதார்த்தத்தில் அவருடைய படங்கள் அமைந்ததில்லை. ஆனால் தான் எடுத்துக் கொண்ட வித்தியாச கதை களத்தை பார்வையாளர்களை ரசிக்க வைத்ததே, பாலாவின் வெற்றி.

  MORE
  GALLERIES

 • 27

  Bala: கடினமான கதை களங்களில் வெற்றிக்கொடி நாட்டிய இயக்குநர் பாலா!

  இன்று பாலா தனது 56-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையடுத்து அவர் இயக்கிய சிறந்த படங்களைப் பற்றி இங்கே குறிப்பிடுகிறோம்.

  MORE
  GALLERIES

 • 37

  Bala: கடினமான கதை களங்களில் வெற்றிக்கொடி நாட்டிய இயக்குநர் பாலா!

  சேது படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாலா, தனது முதல் படத்தை நடிகர் விக்ரம் மற்றும் நடிகை அபிதாவை முன்னணி கதாபாத்திரங்களாக வைத்து இயக்கினார். இது விக்ரமின் திரை வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தியது. தமிழின் சிறந்த படமாக தேசிய விருதை வென்ற இப்படம், இந்தி, கன்னடம் மற்றும் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டது.

  MORE
  GALLERIES

 • 47

  Bala: கடினமான கதை களங்களில் வெற்றிக்கொடி நாட்டிய இயக்குநர் பாலா!

  2003-ல் வெளியான பிதாமகன் படத்தில் விக்ரம், சூர்யா, லைலா மற்றும் சங்கீதா முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சித்தன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த விக்ரம் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றார்.

  MORE
  GALLERIES

 • 57

  Bala: கடினமான கதை களங்களில் வெற்றிக்கொடி நாட்டிய இயக்குநர் பாலா!

  இந்தப் படம் ஜெயமோகனின் ஏழாம் உலகம் என்ற தமிழ் நாவலை அடிப்படையாகக் கொண்டது. 2009 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தின் வசனங்களையும் அவரே எழுதியிருந்தார். இதில் ஆர்யா மற்றும் பூஜா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மீண்டும் ஒரு கடினமான படத்தை இயக்கிய பாலா, சிறந்த இயக்கத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்றார்.

  MORE
  GALLERIES

 • 67

  Bala: கடினமான கதை களங்களில் வெற்றிக்கொடி நாட்டிய இயக்குநர் பாலா!

  அதர்வா, வேதிகா, தன்ஷிகா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்த பரதேசி படம் எரியும் பனிக்காடு என்ற நாவலை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. இப்படம் வசூல் ரீதியாக வரவேற்பைப் பெறாவிட்டாலும், விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது.

  MORE
  GALLERIES

 • 77

  Bala: கடினமான கதை களங்களில் வெற்றிக்கொடி நாட்டிய இயக்குநர் பாலா!

  சசிக்குமார் - வரலட்சுமி சரத்குமார் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்த தாரை தப்பட்டை ஒரு மியூசிக்கல் ஆர்ட் திரைப்படம். இளையராஜாவின் 1000-வது படமான இது, சிறந்த பின்னணி இசைக்காக அவருக்கு தேசிய விருதை பெற்று தந்தது.

  MORE
  GALLERIES