முகப்பு » புகைப்படம் » சினிமா
1/ 6


கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுடன் செல்பி எடுத்துக்கொண்ட மாற்றுதிறனாளி சிறுவன் பிரணவ், நடிகர் ரஜினிகாந்தை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார்.
2/ 6


இரண்டு கைகளையும் இழந்த பிரணவ் கடந்த மாதம் கேரள முதல்வரை நேரில் சந்தித்து வெள்ள நிவாரண நிதி வழங்கினார். கைகள் இல்லாததால் கால்களையே கைகளாக பாவித்து வரும் இவரின் கால்களை பிடித்து கை குலுக்கினார் பினராய் விஜயன். அப்போது இருவரும் எடுத்துக்கொண்ட செல்ஃபி வைரலானது.
6/ 6


இரண்டு கால்களால் செல்போனை பிடித்து ரஜினிகாந்துடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார் பிரணவ்வை நடிகர் ரஜினிகாந்த் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். இச்சந்திப்புக்கான ஏற்பாடுகளை கராத்தே தியாகராஜன் செய்துள்ளார்.
Loading...