நடிகை தர்ஷா குப்தாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. நடிகை தர்ஷா குப்தா சீரியல்களில் நடித்து பிரபலமானார்.முள்ளும் மலரும், செந்தூரப்பூவே ஆகிய சீரியல்களில் நடித்தார். குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார். தர்ஷா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒரு சில வாரங்கள் மட்டுமே கலந்துக்கொண்டாலும் மக்கள் மனதில் இடம்பிடித்தார். ‘ருத்ர தாண்டவம்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.’ஓ மை கோஸ்ட்’ என்ற படத்திலும் நடித்துள்ளார். தர்ஷா குப்தாவுக்கு இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளனர். தர்ஷா குப்தா அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ்களை பதிவிடுவார். தர்ஷா குப்தா தற்போது கங்குபாய் கத்தியவாடி படத்தின் ஆலியா பட் லுக்கில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அப்படியே ஆலியா பட் லுக்கை ரீகிரியேட் செய்துள்ளார் தர்ஷா குப்தா.