ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » மீண்டும் இயக்குநராகும் தனுஷ் - ஹீரோ யார் தெரியுமா?

மீண்டும் இயக்குநராகும் தனுஷ் - ஹீரோ யார் தெரியுமா?

நீண்ட இடைவேளைக்கு பிறகு தனுஷ் ஒரு படத்தை இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

 • 16

  மீண்டும் இயக்குநராகும் தனுஷ் - ஹீரோ யார் தெரியுமா?

  தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்டவர் தனுஷ். எல்லாவற்றிலும் சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கிறார். தனுஷ் முதன்முதலாக இயக்கிய பவர் பாண்டி கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாகி பாஸிட்டிவ் விமர்சனங்களை அள்ளியது. இந்தப் படத்தில் ராஜ்கிரண் முதன்மை வேடத்தில் நடிக்க, அவரது சிறுவயது வேடத்தில் தனுஷ் நடித்திருந்தார்.

  MORE
  GALLERIES

 • 26

  மீண்டும் இயக்குநராகும் தனுஷ் - ஹீரோ யார் தெரியுமா?

  தமிழில் வெற்றிபெற்ற பவர் பாண்டி கன்னடத்தில்  மறைந்த நடிகர்அம்பரீஷ் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் நல்ல வரவேற்பை பெற்றது.

  MORE
  GALLERIES

 • 36

  மீண்டும் இயக்குநராகும் தனுஷ் - ஹீரோ யார் தெரியுமா?


  பவர் பாண்டி பட வெற்றியின் காரணமாக தனுஷ் தொடர்ச்சியாக படங்களை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப தேனான்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் படத்தை தனுஷ் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் அந்தப் படம் கைவிடப்பட்டது.

  MORE
  GALLERIES

 • 46

  மீண்டும் இயக்குநராகும் தனுஷ் - ஹீரோ யார் தெரியுமா?


  இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு தனுஷ் ஒரு படத்தை இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றிப்படமாக அமைந்தது.

  MORE
  GALLERIES

 • 56

  மீண்டும் இயக்குநராகும் தனுஷ் - ஹீரோ யார் தெரியுமா?

  இந்தப் படத்தில் நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் - துஷாரா விஜயன் முதன்மை வேடத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 66

  மீண்டும் இயக்குநராகும் தனுஷ் - ஹீரோ யார் தெரியுமா?

  பா.ரஞ்சித் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான நட்சத்திரம் நகர்கிறது படத்திலும் காளிதாஸ் ஜெயராம் - துஷாரா விஜயன் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  MORE
  GALLERIES