கமல்ஹாசன் வெவ்வேறு காலகட்டங்களில் பல உறவுகளில் இருந்தபோதும், நாம் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், அவரது பார்ட்னர்கள் யாரும் அவர் மீது சாட்டவில்லை. நல்ல நிலையில் சுமூகமாகவே பிரிந்துள்ளனர். கமல்ஹாசன் மற்றும் கௌதமியை பல்வேறு சந்தர்ப்பங்களில் ஒன்றாகப் பார்த்து மகிழ்ச்சியுடன் இருந்தபோது, அவர்களது திடீர் முறிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பிரபுதேவா தனது மனைவியை பிரிந்த கதை மிகப்பெரிய செய்திகளில் ஒன்றாகும். நயன்தாராவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததால், அவரது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. நயன்தாரா குத்திக் கொண்ட ‘பிரபு’ டாட்டூவையும், பின்னர் விக்னேஷ் சிவனை காதலிக்க தொடங்கிய பிறகு, அதில் அவர் செய்த மாற்றங்களையும் யார் மறந்திருப்பார்கள்?
இசை வாழ்க்கையில் அடைந்த வெற்றியை மீறி, யுவன் ஷங்கர் ராஜாவின் தனிப்பட்ட வாழ்க்கை இரண்டு தோல்வியுற்ற திருமணங்களுடன் ரோலர் கோஸ்டர் ரைடாக இருந்தது. 2005-ல் சுஜயா சந்திரனை மணந்தார் யுவன், ஆனால் அந்தத் திருமணம் மூன்று மாதங்களில் விவாகரத்தில் முடிந்தது. பின்னர் 2008-ல், அவர் ஷில்பா மோகனை மணந்தார், ஆனால் அவர்களும் பிரிந்தனர். இதையடுத்து 2014-ஆம் ஆண்டு, இஸ்லாம் மதத்திற்கு மாறிய யுவன், ஜனவரி 1, 2015 அன்று கீழக்கரையை சேர்ந்த ஜஃப்ருன்னிசாவை திருமணம் செய்துக் கொண்டார். இப்போது அவர்கள் தங்கள் மகளுடன் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
ராதிகா சரத்குமாரின் காதல் வாழ்க்கை தமிழ் சினிமா மறக்க முடியாத மற்றொரு தலைப்பு. அவர் 1985-ல் நடிகர் பிரதாப் போத்தனுடன் உறவில் இருந்தார். இந்த குறுகிய கால உறவு விரைவில் முடிவுக்கு வந்தது, பின்னர் 1990-ல், அவர் தனது முதல் குழந்தையான ராயனேவின் தந்தையான ரிச்சர்ட் ஹார்டி என்ற பிரிட்டிஷ் நபரை மணந்தார். ஆனால் அந்த திருமணம் 1992-ல் முடிவுக்கு வந்தது. இதையடுத்து பல வருடங்கள் தனி பெண்ணாக இருந்ததைத் தொடர்ந்து, 2001-ல், சரத்குமாரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்.
கன்ணியமான தம்பதிகள் பிரிந்த பிறகும் எப்படி நட்பாக இருக்க வேண்டும் என்பதற்கு ரோகினியும், ரகுவரனும் உதாரணம். இவர்களது திருமணம் 1996-ல் நடந்தது, 2004-ம் ஆண்டு பிரிந்தனர். ஆனால் விவாகரத்துக்குப் பிறகும், ரகுவரன் மறையும் வரை இருவரும் நண்பர்களாகவே இருந்தனர் என்பது அனைவரும் அறிந்ததே. ரோகினி, இன்றும் தனது கணவரைப் பற்றி அவ்வப்போது நேர்மறையாக ட்வீட் செய்கிறார்.