துணிவு படத்தில் முழுக்க முழுக்க நெகட்டிவ் ரோலில் நடித்திருக்கிறார் நடிகர் அஜித். அதற்கேற்ப மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்கிறீங்களே வெக்கமா இல்ல? என நடிகர் பிரேம் கேட்க , மாஸ்க்கை கழட்டிவிட்டு சிரித்துக்கொண்டே கூலாக 'இல்ல' என்கிறார்.
2/ 8
நாணயம் போன்ற சில ஹெய்ஸ்ட் படங்களே தமிழில் வந்திருக்கின்றன. மணி ஹெய்ஸ்ட் வெப் சீரிஸ் பார்த்துவிட்டு மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் டிரெய்லர் அமைந்திருக்கிறது.
3/ 8
இந்த மாதிரியான படங்களில் கதை ஒரே லொகேஷனில் நடைபெறும். ஆனால் இந்தப் படத்தில் அஜித், மஞ்சு வாரியர் வெவ்வேறு லொகேஷன்களில் இருப்பதால் அவை ஃபிளாஸ்பேக் காட்சிகளாக இருக்கக் கூடும் என்று எண்ணம் தோன்றுகிறது.
4/ 8
சமுத்திரக்கனி போலீஸாக வருகிறார். அவர் ஒரு நல்ல போலீஸாக கடமையை செய்ய, நெகட்டிவான போலீஸாக தெலுங்கு நடிகர் அஜய் இருப்பார் என்பதை டிரெய்லரை வைத்து யூகிக்க முடிகிறது.
5/ 8
பீஸ்ட் படத்தில் ஒரு மாலில் மக்களை பிணையகைதிகளாக தீவிரவாதிகள் அடைத்து வைக்க அவர்களை எப்படி விஜய் மீட்கிறார் என்பது கதையாக இருந்தது. இதில் பேங்க்கில் மக்களை பிடித்து வைத்திருப்பதே அஜித் தான். அவ்வளவுதான் வித்தியாசம். இதன் காரணமாக இரண்டு டிரெய்லர்களும் ஒரே சாயலில் இருக்கின்றன.
6/ 8
கேஜிஎஃப் 2, விக்ரம் போன்ற படங்களுக்கு பிறகு இந்தப் படத்தில் மிஷின் கன்கள் இடம்பெற்றுள்ளன.
7/ 8
டிரெய்லரின் இறுதியில் மிஷின் கன்களால் சுடும் காட்சியில் அஜித் போலீஸ் உடையில் இருக்கிறார். இதனால் படத்தில் அவர் போலீஸாக கூட இருக்கக்கூடும்.
8/ 8
அஜித்தின் பெயரை விநாயக் மகாதேவ் என ரசிகர்கள் யூகித்து வந்த நிலையில் அவரின் பெயரை டிரெய்லரில் குறிப்பிடாதது அவர்களுக்கு ஏமாற்றமாக அமைந்திருக்கும்