கணேஷ் கே.பாபு இயக்கத்தில் கவின், அபர்ணா தாஸ் இணைந்து நடித்துள்ள டாடா திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. ஒலிம்பியா மூவிஸ் சார்பில் அம்பேத் குமார் தயாரித்துள்ள இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தில் பாக்யராஜ், ஐஸ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி, ஹரிஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஜென் மார்டின் இசையமைத்துள்ளார்.