நடிகை கீர்த்தி ஷெட்டி ‘சூப்பர் 30’ என்ற ஹிந்தி படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். 2021 ஆம் ஆண்டு வெளியான ‘உப்பென்னா’ படம் மூலம் பல ரசிகர்களை சம்பாதித்தார். கீர்த்தி ஷெட்டி நடிப்பில் இதுவரை தமிழில் எந்த படமும் வெளியாகவில்லை என்றாலும் இவருக்கு ஏராளமான தமிழ் ரசிகர்கள் இருக்கின்றனர். தற்போது தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகும் ‘தி வாரியர்’ படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கீர்த்தி ஷெட்டிக்கு 2003 ஆம் ஆண்டு பிறந்துள்ளார்.தற்போது இவருக்கு 18 வயதாகிறது. கீர்த்தி ஷெட்டி இன்ஸ்டாகிராமில் அடிக்கடி புகைப்படங்களை பகிர்வார். டெனிம் ஷர்ட் அணிந்து செம்ம கெத்தான லுக்கில் கீர்த்தி ஷெட்டி. வெள்ளை நிற கோட் சூட் அணிந்து ரசிக்க வைக்கும் கீர்த்தி. பச்சை நிற புடவையில் மயக்கும் கீர்த்தி ஷெட்டி.