திரைப்படங்களை போலவே டிவி சீரியல்களில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் வெறித்தனமான ரசிகர்கள் உள்ளனர். சமூக வலைதளங்களில் டிவி நடிகர், நடிகைகளுக்கென்றே தனி ஃபேன் பேஜ் துவங்கி கொண்டாடிவருகின்றனர். அந்த வகையில் கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பான இதயத்தை திருடாதே தொடரில் நடித்த ஹிமா பிந்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். படையப்பா படத்தில் இடம் பெற்ற எம்பேரு படையப்பா பாடலில் நான் மீச வச்ச குழந்தையப்பா என்ற வரியின் போது ரஜினியின் முகம் குழந்தையின் முகமாக மாறும். அந்த குழந்தையே ஹிமா பிந்துதான். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் இலக்கியா என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறுவயதில் தளபதி விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். நீங்களா அது என ரசிகர்கள் ஆச்சரியம் தெரிவித்து வருகின்றனர்.