திருவான்மியூரில் நடைபெற்ற கல்பாத்தி அகோரம் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சரும் நடிகர் விஜய்யும் சந்தித்து கொண்டனர்.
2/ 9
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் வரும் 13-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
3/ 9
பீஸ்ட் படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜை ஹெக்டே, இயக்குநர் செல்வராகவன், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
4/ 9
பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் அடுத்த படத்தை வம்சி பைடிப்பள்ளி இயக்குகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு இரண்டு மொழிகளுக்கு சேர்த்து இந்தப் படம் இயக்கப்படுகிறது.
5/ 9
இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். அந்தப் படத்துக்கு தமன் இசையமைக்கிறார்.
6/ 9
இந்தப் படத்துக்கான பட பூஜை இன்று நடைபெற்றது. இந்தப் பூஜை விஜய், ராஷ்மிகா மந்தனா, இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி, நடிகர் சரத்குமார் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
7/ 9
இன்றைய படபூஜையின்போது விஜயுடன் ராஷ்மிகா மந்தனா இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.
8/ 9
இந்தநிலையில், சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற கல்பாத்தி அகோரம் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் விஜய் கலந்துகொண்டார்.
9/ 9
அந்த திருமண நிகழ்ச்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினும் வருகை தந்தார். அப்போது, இருவரும் பரஸ்பரம் வணக்கம் தெரிவித்து மரியாதையை பகிர்ந்துகொண்டனர்.