முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » உயிர்பலி வாங்கிய பால்கனி.. 19 வயதில் நிகழ்ந்த சோகம் - திவ்ய பாரதி மரணத்தில் விலகாத மர்மம்

உயிர்பலி வாங்கிய பால்கனி.. 19 வயதில் நிகழ்ந்த சோகம் - திவ்ய பாரதி மரணத்தில் விலகாத மர்மம்

90களில் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக இருந்த நடிகை தனது 19 வயதில் மர்மமான முறையில் மரணமடைந்தார்.

 • 18

  உயிர்பலி வாங்கிய பால்கனி.. 19 வயதில் நிகழ்ந்த சோகம் - திவ்ய பாரதி மரணத்தில் விலகாத மர்மம்

  திரையுலகில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட எத்தனையோ நடிகைகளின் வாழ்க்கை சோகத்தில் முடிந்திருக்கிறது. ஷோபா, ரதி, சில்க் ஸ்மிதா, சௌந்தர்யா என அந்தப் பட்டியல் மிக நீளம்.

  MORE
  GALLERIES

 • 28

  உயிர்பலி வாங்கிய பால்கனி.. 19 வயதில் நிகழ்ந்த சோகம் - திவ்ய பாரதி மரணத்தில் விலகாத மர்மம்

  அந்த வகையில் 90களில் பாலிவுட்டில் கொடிகட்டிப் பறந்தவர் திவ்ய பாரதி. தனது வசீகரமான தோற்றத்தால் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தார்.

  MORE
  GALLERIES

 • 38

  உயிர்பலி வாங்கிய பால்கனி.. 19 வயதில் நிகழ்ந்த சோகம் - திவ்ய பாரதி மரணத்தில் விலகாத மர்மம்

  இதனால் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. 1990 ஆம் ஆண்டு அறிமுகமாகி 1993 ஆம் ஆண்டு வரை மூன்றே ஆண்டுகளில் ஏராளமான படங்களில் நடித்தார்.

  MORE
  GALLERIES

 • 48

  உயிர்பலி வாங்கிய பால்கனி.. 19 வயதில் நிகழ்ந்த சோகம் - திவ்ய பாரதி மரணத்தில் விலகாத மர்மம்

  இப்படி புகழின் உச்சியில் இருக்கும்போதே கடந்த 1993 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி தனது வீட்டு பால்கனியிலிருந்து கீழே விழுந்து இறந்தார். அப்போது அவருக்கு வயது 19.

  MORE
  GALLERIES

 • 58

  உயிர்பலி வாங்கிய பால்கனி.. 19 வயதில் நிகழ்ந்த சோகம் - திவ்ய பாரதி மரணத்தில் விலகாத மர்மம்

  அவரது மறைவு குறித்து பல்வேறு மர்மங்கள் உலவுகின்றன. அதிக மது அருந்தியதன் விளைவாக நிலை தடுமாறி கீழே விழுந்ததாகவும் கூறப்படுகிறது. சிலர் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்கிறார்கள்.

  MORE
  GALLERIES

 • 68

  உயிர்பலி வாங்கிய பால்கனி.. 19 வயதில் நிகழ்ந்த சோகம் - திவ்ய பாரதி மரணத்தில் விலகாத மர்மம்

  சென்னையில் ஒரு படப்பிடிப்பில் கலந்துகொண்ட திவ்ய பாரதி மும்பை திரும்பியிருக்கிறார். பின்னர் தனது புதிய படத்துக்காக ஃபேஷன் டிசைனர் நீதா என்பவரை தனது வீட்டில் சந்தித்திருக்கிறார். அப்போது நீத்தாவின் கணவர் ஷியாம் என்பவரும் உடனிருந்திருக்கிறார்.

  MORE
  GALLERIES

 • 78

  உயிர்பலி வாங்கிய பால்கனி.. 19 வயதில் நிகழ்ந்த சோகம் - திவ்ய பாரதி மரணத்தில் விலகாத மர்மம்

  மூவரும் மது அருந்தியபடி டிவி பார்த்திருக்கிறார்கள். சிறிது நேரத்துக்கு பிறகு திவ்ய பாரதி மட்டும் பால்கனிக்கு சென்று அமர்ந்திருக்கிறார். பின்னர் நிலை தடுமாறி அவர் கீழே விழுந்துவிட்டதாக கூறப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 88

  உயிர்பலி வாங்கிய பால்கனி.. 19 வயதில் நிகழ்ந்த சோகம் - திவ்ய பாரதி மரணத்தில் விலகாத மர்மம்

  அவரது கணவர் சஜித் நதியத்வாலா அவரை கொலை செய்திருக்கலாம், மும்பையின் நிழல் உலகம் இவரது மரணத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று பல வதந்திகள் பரவுகின்றன. ஆனால் திவ்யாவின் தந்தை ஓம் பிரகாஷ் பார்தி அவரது மகளின் மரணம் விபத்து என விளக்கமளித்தார்.

  MORE
  GALLERIES