தன்னை உருவகேலி செய்வதாக பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே உருக்கமாக தெரிவித்துள்ளார்.
2/ 7
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான லைகர் படத்தில் விஜய் தேவகொண்டாவுக்கு ஜோடியாக நடித்தவர் அனன்யா பாண்டே.
3/ 7
பிரபல பாலிவுட் நடிகர் சங்கி பாண்டேவின் மகளான இவர், தான் ஒல்லியாக இருப்பதால் உருவ கேலிக்கு ஆளாகியிருப்பதாக தெரிவித்துள்ளார்.
4/ 7
இது குறித்து அவர் அளித்த பேட்டியில், “நான் ஒல்லியாக இருப்பதாக பலர் என்னை உருவகேலி செய்தனர். ஒரு பெண்ணுக்கு இருக்க வேண்டிய லட்சணங்கள் உனக்கு இல்லை. பையன் மாதிரி இருக்கிறாய்.
5/ 7
இதனால் பல நாட்கள் வருந்தினேன். உடல் பாகங்களை சர்ஜரி செய்துக் கொள்ளலாமா என்று கூட நினைத்தேன். எனது நடிப்பு திறமையை பார்க்காமல் உருவகேலி செய்தனர்.
6/ 7
ஒரு கட்டத்தில் இது குறித்து கவனம் கொள்ளாமல் நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினேன். உடல்கேலியை எதிர் கொள்பவர்கள் சிரித்துக் கொண்டே இருங்கள்” என்ரு தெரிவித்திருக்கிறார்.
7/ 7
அனன்யா பாண்டேவின் இந்த பேச்சு இணையத்தில் வரவேற்பைப் பெற்று வருகிறது.