பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரன்வீர் சிங். ரன்வீர் சிங் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘பாண்ட் பாஜா பாரத்’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார். 2015 ஆம் ஆண்டு ரன்வீர் சிங், தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளியான பஜிராவ் மஸ்தானி படத்தில் நடித்து பலரின் பாராட்டுக்களை பெற்றார். 2019 ஆம் ஆண்டு வெளியான கல்லி பாய் படம் மூலம் ஏராளமான ரசிகர்களை உருவாக்கினார். இன்று வரை ரன்வீர் நடித்த படங்களில் ரசிகர்கள் மனதில் தனி இடத்தை கல்லி பாய் படம் பெற்றுள்ளது. ரன்வீர் சிங் தனது ஃபேஷன் சென்ஸிற்காகவும் பெயர் பெற்றவர். ஃபேஷனை வித்தியாசமாக எக்ஸ்ப்ளோர் செய்ய விரும்புவர். இந்நிலையில் மேகசீன் கவருக்காக ரன்வீர் சிங் நிர்வாணமாக போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. ரன்வீர் சிங்கின் இந்த துணிச்சலான போட்டோ ஷூட் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த புகைப்படத்தில் ரன்வீர் சிங் உடை ஏதும் அணியாமல் தரையில் படுத்தப்படி போஸ் கொடுத்துள்ளார்.