நடிகை சாக்ஷி அகர்வால் பேட்ட, ராஜா ராணி, விஸ்வாசம் ஆகிய படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். பின்பு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்ஷி அகர்வாலுக்கு திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வந்தன. ஆர்யா நடிப்பில் வெளியான டெடி மற்றும் அரண்மனை 3 படத்தில் சாக்ஷி நடித்திருந்தார். ராய் லட்சுமி நடிப்பில் வெளியான சிண்ட்ரில்லா படத்திலும் சாக்ஷி அகர்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது பாகீரா, நான் கடவுள் இல்லை ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். மேலும் தி நைட், புரவி, குறுக்கு வலி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.