விலங்கு
பிரஷாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் விமல், இனியா, பாலசரவணன் நடித்து கடந்த பிப்ரவரி மாதம் கிரைம் திரில்லராக வெளியானது விலங்கு. விமர்சகர்கள், ரசிகர்களின் பாராட்டுக்களை அள்ளியது. நடிகர் விமலுக்கு இந்த வெப் சீரிஸ் திருப்புமுனையாக அமைந்தது என்றே சொல்லலாம். ஜீ5 ஓடிடி தளத்தில் இந்த வெப் சீரிஸைக் காணலாம்.
சுழல்
பிரபல இயக்குநர்களான புஷ்கர் - காயத்ரி எழுதி தயாரித்த சுழல் என்ற வெப் சீரிஸை பிரம்மா மற்றும் அருண்சரண் இயக்கியிருந்தனர். கடந்த ஜூன் மாதம் வெளியான இந்த சீரிஸும் கிரைம் திரில்லர் பாணியில் உருவாகியிருந்தது. ஊட்டி அருகே மலை கிராமம் ஒன்றில் டீனேஜ் பையனும் பெண்ணும் காணாமல் போக அதன் பின்னர் நடப்பனவற்றை கடைசி எபிசோட் வரை சுவாரசியம் குன்றாமல் பதிவு செய்திருக்கிறார்கள். அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் சுழல் வெப் சீரிஸைக் காணலாம்.
தமிழ் ராக்கர்ஸ்
திரில்லர் படங்கள் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான இயக்குநர் அறிவழகன் இயக்கிய இந்த வெப் சீரிஸும் திரில்லர் வகை தான். தமிழ் ராக்கர்ஸ் தளத்தை முடக்க அருண் விஜய் தலைமையில் உருவாகும் ஸ்பெஷல் டீமின் முயற்சியே இந்த வெப் சீரிஸின் கதை. நீண்ட இடைவேளைக்கு பிறகு ஏவிஎம் நிறுவனம் தயாரித்துள்ள இந்த வெப் சீரிஸ் சோனி லிவ் தளத்தில் வெளியாகியுள்ளது. திரில்லர் ரசிகர்கள் முயற்சிக்கலாம்.