தி ரெஸிஸ்டன்ஸ் பேங்க்கர் (The Resistance Banker) இரண்டாவது உலகப் போரை அடிப்படையாகக் கொண்டு உருவான படங்களில் முக்கியமானதாக இப்படம் பார்க்கப்படுகிறது. நெட்ஃபிளிக்ஸில் உள்ள அதிக ஐஎம்டிபி ரேட்டிங் பெற்ற சிறந்த ஒரிஜினல் படங்களில் 8வது இடத்தைப் படித்துள்ளது. இப்படத்தை லோரம் ஜோர்ஸன் இயக்கியிருக்கிறார்.
ஃபர்ஸ்ட் தே கில்டு மை ஃபாதர் (First they killed my father)
பிரபல நடிகை ஏஞ்சலினா ஜோலி இயக்கிய படம் ஆங்கிலம், பிரெஞ்சு, வியாட்னாம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியிருக்கிறது. இப்படத்துக்கு ஐஎம்டிபியில் 7.2 ரேட்டிங் கிடைத்துள்ளது. போரில் சிறுவர்களை ஈடுபடுத்துவது தொடர்பான அந்நாட்டு அரசியலைப் பேசியிருக்கிறது இந்தப் படம்.
ஆன் மை ஸ்கின் (On My Skin )
கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இத்தாலி நாட்டு படமான ஆன் மை ஸ்கின் படத்தை அலேஸியோ கிரிமோனினி இயக்கியிருக்கிறார். இந்த சம்பவம் காவல்துறையினரின் சித்ரவதையில் உயிரிழந்த 31 வயது இளைஞரான ஸ்டெஃபனோ சுச்சியைப் பற்றிய படம். இந்தப் படத்துக்கு நெட்ஃபிளிக்ஸில் வெளியான ஒரிஜினல் படங்களுக்கான ஐஎம்டிபி ரேட்டிங் 7.3 கிடைத்துள்ளது.
அந்தகாரம் (Andhaghaaram)
முதல் இடத்தில் விக்னராஜன் இயக்கியுள்ள தமிழ் படமான அந்தகாரம் உள்ளது. நேரடியாக நெட்ஃபிளிக்ஸில் வெளியான இந்தப் படத்துக்கு 7.5 ரேட்டிங் கிடைத்துள்ளது. அர்ஜூன் தாஸ், வினோத் கிஷன், குமார் நடராஜன் உள்ளிட்டோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்துக்கு 7.5 ஐஎம்டிபி ரேட்டிங் கிடைத்துள்ளது.