ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » விடுமுறையை சிறப்பா கழிக்க முத்து முத்தா 10 படங்கள்.. அமேசான் ஓடிடில இருக்கு!

விடுமுறையை சிறப்பா கழிக்க முத்து முத்தா 10 படங்கள்.. அமேசான் ஓடிடில இருக்கு!

பிரகாஷ் ராஜ் தனது மனைவியின் தங்கை மீது மோகம் கொண்டு தனது மனைவியைக் கொலை செய்கிறார். பின்னர் மனைவியின் தங்கையான சுவலெட்சுமியை திருமணம் செய்துகொள்ள திட்டமிடுகையில் அவருக்கு அஜித் மீது காதல் இருப்பது தெரிகிறது.

 • 110

  விடுமுறையை சிறப்பா கழிக்க முத்து முத்தா 10 படங்கள்.. அமேசான் ஓடிடில இருக்கு!

  பீமா
  லிங்குசாமி இயக்கத்தில் விக்ரம், திரிஷா, ரகுவரன், பிரகாஷ் ராஜ் நடித்த  இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இருப்பினும் ஆக்சன் பட ரசிகர்களால் இன்றளவும் கொண்டாடப்படும் படமாக இருந்துவருகிறது. குறிப்பாக ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் அப்போது தெறி ஹிட். விடுமுறையில் பார்ப்பதற்கு சிறந்த பொழுதுபோக்கு படம்.

  MORE
  GALLERIES

 • 210

  விடுமுறையை சிறப்பா கழிக்க முத்து முத்தா 10 படங்கள்.. அமேசான் ஓடிடில இருக்கு!

  முதல் மரியாதை
  பாரதிராஜா இயக்கத்தில் சிவாஜி கணேசன், ராதா ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்த படம். கல்யாணமான வயதான நபருக்கும், இளம் வயது பெண்ணுக்குமான காதலை எவ்வித விரசமும் இல்லாமல் கவிதையாக படமாக்கியிருப்பார் பாரதிராஜா. கூடவே இளையராஜா தனது பாடல்கள் மூலமாகவும் பின்னணி இசையின் மூலம் பலம் சேர்த்திருந்தார்.

  MORE
  GALLERIES

 • 310

  விடுமுறையை சிறப்பா கழிக்க முத்து முத்தா 10 படங்கள்.. அமேசான் ஓடிடில இருக்கு!

  மழை
  ஒரே பெண்ணை ஹீரோ வில்லன் இருவரும் காதலிக்கும் அதே வழக்கமான கதைதான். ஆனால் காதலர்களை மழை சேர்த்து வைக்கிறது என வித்தியாசமான திரைக்கதையின் மூலம் ரசிக்க வைத்திருப்பார்கள். தெலுங்கில் வெற்றிபெற்ற வர்ஷம் படத்தின் தமிழ் ரீமேக். ஜெயம் ரவி - ஸ்ரேயா ஜோடி ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி அமைந்தன.

  MORE
  GALLERIES

 • 410

  விடுமுறையை சிறப்பா கழிக்க முத்து முத்தா 10 படங்கள்.. அமேசான் ஓடிடில இருக்கு!

  வள்ளல்
  ராஜ்கபூர் இயக்கத்தில் சத்யராஜ், மீனா, ரோஜா இணைந்து நடித்த படம். கவுண்டமனி, செந்திலின் காமெடி இந்தப் படத்தின் ஹைலைட். விடுமுறை தினத்தில் பார்க்க ஒரு நல்ல பொழுதுபோக்கு படம்.

  MORE
  GALLERIES

 • 510

  விடுமுறையை சிறப்பா கழிக்க முத்து முத்தா 10 படங்கள்.. அமேசான் ஓடிடில இருக்கு!

  ரிதம்
  வசந்த் இயக்கத்தில் அர்ஜுன், மீனா, ஜோதிகா, ரமேஷ் அரவிந்த் இணைந்து நடித்த படம். ஒரு ரயில் விபத்தில் அர்ஜுன் தனது மனைவி ஜோதிகாவையும், மீனா தனது கணவர் ரமேஷ் அரவிந்த்தையும் பறிகொடுக்கிறார்கள். வாழ்க்கை துணையை இழந்த அர்ஜுன், மீனா இருவரது காதலை உணர்வுப்பூர்வமாக பதிவு செய்த படம். இந்தப் படத்தின் ஒவ்வொரு பாடல்களும் நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், காற்று என ஐம்பூதங்களைக் கொண்டு ரஹ்மானும், வைரமுத்துவும் உருவாக்கியிருப்பார்கள்.

  MORE
  GALLERIES

 • 610

  விடுமுறையை சிறப்பா கழிக்க முத்து முத்தா 10 படங்கள்.. அமேசான் ஓடிடில இருக்கு!

  காதலர் தினம்
  காதல் தேசம் படத்துக்கு பிறகு இயக்குநர் கதிர் - ஏ.ஆர்.ரஹ்மான் - வாலி வெற்றிக்கூட்டணி இணைந்த படம் காதலர் தினம். அதுவரை கடிதங்கள், தொலைபேசி என காதலித்தவர்கள் முதன்முறையாக இணையதளம் மூலம் காதலிக்க தொடங்கியிருப்பதை எதார்த்தமாக பதிவு செய்த படம். ரஹ்மானின் பாடல்களுக்காகவே இந்தப் படம் ஓடியது என சொல்லலாம். அந்த அளவுக்கு இந்தப் படத்தின் பாடல்கள் டிரெண்ட் செட்டராக அமைந்த படம்.

  MORE
  GALLERIES

 • 710

  விடுமுறையை சிறப்பா கழிக்க முத்து முத்தா 10 படங்கள்.. அமேசான் ஓடிடில இருக்கு!

  மின்சாரக் கனவு
  ஏவிஎம் -ன் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட படம் ராஜீவ் மேனன் இயக்கத்தில் பிரபு தேவா, அரவிந்த் சாமி, கஜோல் உள்ளிட்டோர் முதன்மை வேடங்களில் நடித்த படம். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஊலலலா, வெண்ணிலவே, ஸ்டிராபெரி என இந்தப் படத்தின் பாடல்கள் வேற லெவல் ஹிட்டடித்தது. கல்யாணம் செய்துகொள்ளப்போவதில்லை, கன்னியாஸ்திரி ஆகப்போகிறேன் என்பதில் உறுதியாக இருக்கும் கஜோல் மீது அரவிந்த் சாமிக்கு காதல். தனது காதலை சொல்ல தயங்கும் அரவிந்த் சாமி, பிரபு தேவாவின் உதவியை நாடுகிறார். அதன் பின்னர் நடப்பவனவற்றை சுவாரசியமாக பதிவு செய்திருக்கிறது. இந்தப் படம்.

  MORE
  GALLERIES

 • 810

  விடுமுறையை சிறப்பா கழிக்க முத்து முத்தா 10 படங்கள்.. அமேசான் ஓடிடில இருக்கு!

  ஆசை
  இந்த லிஸ்ட்டில் இயக்குநர் வசந்த்தின் மற்றொரு படம். இந்தப் படத்துக்கு பிறகு அஜித் ஆசை நாயகன் என அழைக்கப்பட்டார். பிரகாஷ் ராஜ் தனது மனைவியின் தங்கை மீது மோகம் கொண்டு தனது மனைவியைக் கொலை செய்கிறார். பின்னர் மனைவியின் தங்கையான சுவலெட்சுமியை திருமணம் செய்துகொள்ள திட்டமிடுகையில் அவருக்கு அஜித் மீது காதல் இருப்பது தெரிகிறது. இருவரது காதலை பிரகாஷ் ராஜ் பிரிக்க முயல்கிறார். அவரது முயற்சியை முறியடித்து அஜித் - சுவலெட்சுமி தங்கள் காதலில் எப்படி வெற்றிக்கொள்கிறார்கள் என்பதே இப்படத்தின் கதை.

  MORE
  GALLERIES

 • 910

  விடுமுறையை சிறப்பா கழிக்க முத்து முத்தா 10 படங்கள்.. அமேசான் ஓடிடில இருக்கு!

  அக்னி நட்சத்திரம்
  மணிரத்னம் இயக்கத்தில் கார்த்திக் - பிரபு இணைந்து நடித்த படம் அக்னி நட்சத்திரம். ஒரு அப்பாவின் இரண்டு மனைவிகளுக்கு பிறந்த மகன்கள் ஈகோ காரணமாக மோதிக்கொள்கிறார்கள். அப்பாவுக்கு ஒரு பிரச்னை என்றதும் ஈகோவை மறந்து ஒன்றாக கைகோர்தது அந்த பிரச்னையை எப்படி சமாளித்தார்கள் என்பதே இப்படத்தின் கதை.

  MORE
  GALLERIES

 • 1010

  விடுமுறையை சிறப்பா கழிக்க முத்து முத்தா 10 படங்கள்.. அமேசான் ஓடிடில இருக்கு!


  மேட்டுக்குடி
  சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்திக், ரம்பா, கவுண்டமணி, ஜெமினி கணேசன் உள்ளிட்டோர் நடித்து கடந்த  1996 ஆம் தேதி வெளியான படம் மேட்டுக்குடி. மன்னர் கால விலையுயர்ந்த வாள் ஒன்று ஜமீனான ஜெமினி கணேசன் வீட்டில் இருக்கிறது. அந்த வாளை திருட அந்த குடும்பத்தின் வாரிசாக நுழைகிறார் கார்த்திக். அதன் பிறகு நடப்பனவற்றை கலாட்டாவாக பதிவுசெய்திருப்பார் சுந்தர்.சி. காமெடி படம் பார்க்கவிரும்புவர்கள் இப்படத்தை முயற்சிக்கலாம்.

  MORE
  GALLERIES