தி பிளாக் ஃபோன் ( The Black Phone ) என்பது 2021 ஆம் ஆண்டு வெளியான திகில் திரைப்படம் ஆகும். டெரிக்சன் மற்றும் சி. ராபர்ட் கார்கில் எழுதிய இந்தப் படத்தை ஸ்காட் டெரிக்சன் இயக்கியுள்ளார். இது 2004 ஆம் ஆண்டு ஜோ ஹில் எழுதிய சிறுகதையின் தழுவலாகும். இப்படத்தில் மேசன் தேம்ஸ், மேடலின் மெக்ரா, ஜெர்மி டேவிஸ், ஜேம்ஸ் ரான்சோன் மற்றும் ஈதன் ஹாக் ஆகியோர் நடித்துள்ளனர்.
டீப் வாட்டர் (Deep Water) அட்ரியன் லைன் இயக்கிய ஒரு சைக்காலஜி திரில்லர் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் பென் அஃப்லெக் மற்றும் அனா டி அர்மாஸ் ஆகியோர் நடித்துள்ளனர், ட்ரேசி லெட்ஸ், லில் ரெல் ஹோவரி, டாஷ் மிஹோக், ஃபின் விட்ராக், கிறிஸ்டன் கோனாலி மற்றும் ஜேக்கப் எலோர்டி ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.
தி பேட்மேன் (The Batman) என்பது டிசி காமிக்ஸ் கதாபாத்திரமான பேட்மேனை அடிப்படையாகக் கொண்ட சூப்பர் ஹீரோ திரைப்படமாகும். பீட்டர் கிரேக் திரைக்கதையை எழுதிய மேட் ரீவ்ஸ் இப்படத்தை இயக்கியுள்ளார். இதில் ராபர்ட் பாட்டின்சன் புரூஸ் வெய்ன் / பேட்மேனாக ஜோ கிராவிட்ஸ், பால் டானோ, ஜெஃப்ரி ரைட், ஜான் டர்டுரோ, பீட்டர் சர்ஸ்கார்ட், ஆண்டி செர்கிஸ் மற்றும் கொலின் ஃபாரெல் ஆகியோர் நடித்துள்ளனர்.