ஜொனிதா காந்தி பிரபல பாடகியாக வலம் வருகிறார். இவர் ஹிந்தி, தமிழ், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் கலக்கி வருகிறார். ஜொனிதா காந்தி கனடாவில் பிறந்து வளர்ந்தவர். இவர் ஹிந்தியில் வெளியான ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தின் இடம்பெற்ற பாடல் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானார். தமிழில் ஓ காதல் கண்மணி படத்தில் இடம்பெற்ற ‘மெண்டல் மனதில்’ பாடல் மூலம் அறிமுகமானார். தற்போது பல ஹிட் பாடல்களை பாடி பிரபல பின்னணி பாடகியாக வலம் வருகிறார். விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற ‘ஹலமித்தி ஹபிபோ’ பாடலை ஜொனிதா பாடினார். இந்த பாடல் உலக புகழ் பெற்றது. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் படத்தில் இடம்பெற்ற ‘ப்ரைவேட் பார்ட்டி’ பாடலையும் பாடியிருந்தார். ஒரு பக்கம் பாடகியாக கலக்கி வந்தாலும் போட்டோ ஷூட் செய்யவும் தவறுவதில்லை ஜொனிதா. டெனிம் ட்ரெஸில் ஸ்டைலாக போஸ் கொடுக்கும் ஜொனிதா. உடைக்கு ஏற்றது போல் அணிகலன்கள் அணிந்து கூடுதல் அழகில் ஜொலிக்கும் ஜொனிதா.