நம்மவரில் வரும் உணர்ச்சிகரமான வேடம் என பல்வேறு கதாபாத்திரங்களில் நாகேஷை நடிக்க வைத்த கமல், மகளிர் மட்டும் படத்தில் உயிரிழந்த பிணமாக நாகேஷுக்கு சவாலான வேடம் தந்தார். வசனம், முகபாவம், பாடிலாங்வேஜ் எதுவும் இல்லை. ஆனாலும், நாகேஷ் பிணமாக வரும் காட்சிகளில் ஜனம் வாய்விட்டு சிரித்தது.