இயக்குநர் அட்லீயின் மனைவி பிரியா அட்லீ ஆண் குழந்தைக்கு தாயாகியிருக்கிறார். கடந்த ஆண்டு டிசம்பரில், இயக்குனர் அட்லீ மற்றும் அவரது மனைவி பிரியா இருவரும் பெற்றோராக காத்துக் கொண்டிருப்பதாக அறிவித்தனர். பல ஆண்டுகளாக காதலித்து வந்த அட்லீ மற்றும் பிரியா இருவரும் நவம்பர் 9, 2014 அன்று சென்னையில் பிரமாண்டமாக திருமணம் செய்துக் கொண்டனர். அவர்களுக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குட் நியூஸை அழகான படத்துடன் இளம் தம்பதி அறிவித்துள்ளனர். ”அவர்கள் சொன்னது சரிதான். எங்கள் மகன் இங்கே இருக்கிறான், இந்த மாதிரி ஒரு உணர்வு உலகில் இல்லை. பெற்றோராக எங்கள் சாகசமான புதிய பயணம் இன்று முதல் தொடங்குகிறது” எனப் பதிவிட்டுள்ளனர். இதையடுத்து பிரியா அட்லீ தம்பதிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.