கேரளாவின் கொச்சினில் பிறந்தவர் நடிகை அசின். அப்பா பிஸினெஸ் மேன், அம்மா மருத்துவர். பள்ளி, கல்லூரி படிப்பை கேரளாவில் முடித்த அசின், ஆங்கில இலக்கியம் பயின்றவர். மலையாளம் (அவரது தாய்மொழி), தமிழ், தெலுங்கு, இந்தி, பிரஞ்சு, ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதம் என 7 மொழிகளை சரளமாக பேசக்கூடியவர் அசின். முதன் முதலில் ஃபோன் விளம்பரத்தில் நடித்தார். பின்னர் 15 வயதில் மலையாளத்தில் நடிகையாக அறிமுகமானார். தமிழில் கமல் ஹாசன், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். பின்னர் மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் ஷர்மாவை காதலித்து கரம் பிடித்தார். தற்போது இவர்களுக்கு அரின் என்ற மகளும் உள்ளார். இதற்கிடையே அசினின் குழந்தைப்பருவ படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.