அரபிக் குத்து பாடலின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. விஜய் நடிப்பில் உருவான பீஸ்ட் திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த அந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். அனிருத் இசையில் பீஸ்ட் படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக அரபிக் குத்து பாடல் பட்டி தொட்டியெங்கும் ஹிட்டடித்தது. திரையில் அரபிக்குத்து பாடலைப் பார்த்த ரசிகர்கள் அதில் விஜய் எப்போதையும் விட ஒருபடி மேலாக நடனமாடியதாக குறிப்பிட்டனர். இந்நிலையில் தற்போது அரபிக்குத்து பாடலின் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தற்போது அந்த வீடியோ 6 மில்லியன் பார்வைகளைக் கடந்து ட்ரெண்டிங்கில் உள்ளது.