ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » தமிழ்-தமிழ்நாடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏ.ஆர்.ரஹ்மானின் தரமான சம்பவங்கள்!

தமிழ்-தமிழ்நாடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏ.ஆர்.ரஹ்மானின் தரமான சம்பவங்கள்!

என் அம்மாவை நான் மதர் என அழைப்பதில்லை. அம்மா என்று தான் கூப்பிடுகிறேன்.

 • 19

  தமிழ்-தமிழ்நாடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏ.ஆர்.ரஹ்மானின் தரமான சம்பவங்கள்!

  இன்று தனது 56-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். அவர் பொதுவெளியில் செய்த சில தரமான சம்பவங்களை இங்கே குறிப்பிடுகிறோம்.

  MORE
  GALLERIES

 • 29

  தமிழ்-தமிழ்நாடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏ.ஆர்.ரஹ்மானின் தரமான சம்பவங்கள்!

  ஏ.ஆர்.ரஹ்மானின் ரனாக் ஆல்பம் வெளியீட்டில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் கலந்துக்கொண்டிருப்பார். அப்போது ரஹ்மான், சாதாரண இசையமைப்பாளர் தான் எனக் கூறி, கை கொடுக்க போவார் சல்மான். அதற்கு கை கொடுக்க மறுத்து விடுவார் ரஹ்மான்.

  MORE
  GALLERIES

 • 39

  தமிழ்-தமிழ்நாடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏ.ஆர்.ரஹ்மானின் தரமான சம்பவங்கள்!

  பின்னர் நடந்த பிரஸ் மீட்டில் ‘எப்போது சல்மான் கான் படத்துக்கு இசையமைப்பீர்கள்?’ என்ற கேள்விக்கு, ‘எனக்கு பிடிக்கும்படி எப்போது நடிக்குறாரோ, அப்போது அது நடக்கும்’ என பதிலளித்திருப்பார் ஏ.ஆர்.ஆர்.

  MORE
  GALLERIES

 • 49

  தமிழ்-தமிழ்நாடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏ.ஆர்.ரஹ்மானின் தரமான சம்பவங்கள்!

  2012-ம் ஆண்டு சிங்கப்பூரில் நடந்த IIFA விருது விழா முழுக்க முழுக்க பாலிவுட்டை மையப்படுத்தி இந்தியிலேயே அமைந்திருக்கும். பின்னர் சிறந்த நடிகருக்கான விருது கொடுக்க ஏ.ஆர்.ரஹ்மானும், ரேகாவும் அழைக்கப்படுவார்கள். அப்போது, ‘IIFA சிறந்த நடிகருக்கான விருது ரன்பீர் கபூர் அவர்களுக்கு’ என்று தமிழில் பேசி பாலிவுட் பிரபலங்கள் முகத்தில் மறைமுகமாக அறைந்திருப்பார் ஏ.ஆர்.ரஹ்மான்.

  MORE
  GALLERIES

 • 59

  தமிழ்-தமிழ்நாடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏ.ஆர்.ரஹ்மானின் தரமான சம்பவங்கள்!

  ஏ.ஆர்.ரஹ்மான் இந்தி படங்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறார், தமிழை புறக்கணிக்கிறார், என்ற பேச்சுகள் எழுந்த சமயத்தில், ஆஸ்கர் விருது மேடையில் ‘எல்லா புகழும் இறைவனுக்கே’ என சாந்தமாக தமிழ் மீதான தனது பற்றை வெளிப்படுத்தியிருப்பார்.

  MORE
  GALLERIES

 • 69

  தமிழ்-தமிழ்நாடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏ.ஆர்.ரஹ்மானின் தரமான சம்பவங்கள்!

  ’எங்கு போனாலும் தமிழிலேயே பேசுகிறீர்களே? தமிழை நிலை நிறுத்தவா?’ என்ரு நேர்க்காணல் ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு, ‘கண்டிப்பாக, நான் அமெரிக்கா, லண்டன் என எங்கு வேணுடுமானாலும் செல்லலாம். ஆனால் என் அம்மாவை மதர் என அழைப்பதில்லை. அம்மா என்று தான் கூப்பிடுகிறேன். அதுபோலத்தான் இதுவும்” என்றார் இசைப்புயல்.

  MORE
  GALLERIES

 • 79

  தமிழ்-தமிழ்நாடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏ.ஆர்.ரஹ்மானின் தரமான சம்பவங்கள்!

  கனடாவில் குடியுரிமை தர தயாராக இருப்பதாக அங்குள்ள மேயர் கூறியதற்கு, ‘குடியுரிமை வழங்க முன்வந்ததற்கு நன்றி. ஆனால் நான் இந்தியாவின் தமிழ்நாட்டில் குடும்பம் மற்றும் நண்பர்களோடு மிகவும் நிம்மதியாக இருக்கிறேன்’ என பதிலளித்திருந்தார் ரஹ்மான்.

  MORE
  GALLERIES

 • 89

  தமிழ்-தமிழ்நாடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏ.ஆர்.ரஹ்மானின் தரமான சம்பவங்கள்!

  கடந்த ஏப்ரலில் தமிழ்நாட்டில் மீண்டும் இந்தி திணிப்பு பிரச்னை தலை தூக்கிய நேரத்தில் தமிழன்னை ‘ழ’ எனும் வேலை கையில் ஏந்தியபடி இருக்கும் தமிழணங்கு எனும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இந்தப் படம் இணையத்தில் படு வைரலானது.

  MORE
  GALLERIES

 • 99

  தமிழ்-தமிழ்நாடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏ.ஆர்.ரஹ்மானின் தரமான சம்பவங்கள்!

  ஏ ஆர் ரஹ்மான், கதை எழுதி, தயாரித்த 99 சாங்ஸ் என்ற என்ற படத்தின் பிரஸ் மீட்டில், மேடையில் இந்தியில் பேசிய தொகுப்பாளினியிடம், ‘இந்தி?’ எனக்கேட்டு விட்டு டக்கென இறங்கினார் ரஹ்மான். ‘நான் உங்க கிட்ட மொதல்லயே கேட்டேன் தமிழ் பேசுவீங்களானு?’ என ஜாலியாகவும் கேட்டார். இப்படி பொதுவெளியில் பல தரமான சம்பவங்களை செய்திருக்கிறார் நம்ம இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.

  MORE
  GALLERIES