சென்னைக்கு அடுத்ததாக தமிழ்நாட்டில் தனக்கு பிடித்த ஊரின் பெயரை தெரிவித்துள்ள நடிகை ப்ரியாபவானி சங்கர். சோஷியல் மீடியாவில் ரசிகர் ஒருவர் கேட்ட இந்த கேள்விக்கு ப்ரியா பதில் அளித்திருக்கிறார். சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ப்ரியாவும் ஒருவர். இதனால் இவரது சமூக வலைதள கணக்குகளை குறுகிய காலத்தில் ஏராளமானோர் பின் தொடர்ந்துள்ளனர். இன்ஸ்டாகிராமில் ப்ரியாவை 32 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள். தமிழ் சினிமாவில் பிஸியான நடிகைகளில் ஒருவராக ப்ரியா மாறியுள்ளார். சமீபத்தில் ப்ரியா நடிப்பில் வெளியான யானை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது சிம்பு நடிக்கும் பத்து தல படத்தில் முக்கிய கேரக்டரில் ப்ரியா இடம்பெற்றுள்ளார். சென்னைக்கு அடுத்தபடியாக தனக்கு பிடித்தமான ஊர் என்ற கேள்விக்கு கன்னியாகுமரி என்று ப்ரியா பதில் அளித்துள்ளார். பத்து தல படத்தின் ஷூட்டிங் தற்போது கன்னியாகுமரியில் நடிந்து வருகிறது. ப்ரியா பவானி சங்கர்