வில்லியாக நடிப்பது கஷ்டம் என்றும், இருப்பினும் நடித்து திறமையை நிரூபித்துள்ளதாகவும் நடிகை வரலட்சுமி சரத்குமார் கூறியுள்ளார். 2012 இல் வெளிவந்த போடா போடி படத்தின் மூலம் வரலட்சுமி சினிமாவில் அறிமுகம் ஆனார். விக்ரம் வேதா, சர்கார், சண்டைக்கோழி 2 படங்கள் வரலட்சுமிக்கு வரவேற்பை அளித்தன. தமிழை தவிர்த்து தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழி படங்களிலும் இவர் நடித்து வருகிறார். சமீபத்தில் வரலட்சுமி அளித்துள்ள பேட்டியில், தனது வில்லி கேரக்டருக்கு வரவேற்பு இருப்பதாக கூறியுள்ளார். ‘வில்லியாக நடிப்பது கஷ்டம். ஆனாலும் என்னால் முடியும் என்று திறமையை நிரூபித்துள்ளேன்’ 10 ஆண்டுகள் சினிமா பயணம் சுலபமானதாக இல்லை. நிறைய நிராகரிப்புகளை எதிர்கொண்டேன். எனது திறமையை வெளிப்படுத்த பல பட வாய்ப்புகள் கிடைத்தன. இப்போது திரும்பி பார்க்கும்போது 45 படங்களில் நடித்திருக்கிறேனா என்ற வியப்பு ஏற்படுகிறது. சினிமா வாழ்க்கை பிஸியாக செல்கிறது. மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார் வரலட்சுமி சரத்குமார்.