கார் பந்தயம் தொடர்பான திரைப்படங்களின் வரிசையில் முன்னணில் உள்ளவை தி ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் திரைப்படங்கள் ( The Fast and the Furious) . வின் டீசல், மைக்கேல் ரோட்ரிக்ஸ் ஜோர்டானா ப்ரூஸ்டர், டைரஸ் கிப்சன் உட்பட பல்வேறு நட்சத்திரங்கள் இந்த திரைப்படங்களில் நடித்திருந்தாலும், வின் டீசலுக்கு அடுத்தபடியாக ரசிகர்களை கவர்ந்தவர் பால் வாக்கர் தான்.
அவரது மரணம் உலகம் முழுவதும் உள்ள ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் திரைப்பட ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. கடைசியாக அவர் நடித்த ஃப்யூரியஸ் 7 திரைப்படத்தில் அவரது கதாபாத்திரம் இறக்காத வகையில் அமைக்கப்பட்டது. தனது நெருங்கிய நண்பர் பால் வாக்கரின் நினைவாக தனது மகளுக்கு பாலின் என்று வின் டீசல் பெயர் சூட்டினார்.
பால் வாக்கர் இறந்துவிட்டதால் மெடோ வாக்கரின் திருமணத்தில் பால் வாக்கரின் நெருங்கிய நண்பரும் நடிகருமான வின் டீசலின் கைகளை பற்றியப்படி மெடோ வாக்கர் நடந்துவந்தார். இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோ ஆகியவற்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மெடோ வாக்கர் பகிர்ந்துள்ளார். இதனை பலரும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.