நடிகை அனிகா சுரேந்திரன் தான் கோட் - ஷூட்டில் எடுத்த லேட்டஸ்ட் படங்களை இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார். நடிகை அனிகா சுரேந்திரன் குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் அறிமுகமானார். அதையடுத்து தமிழில் என்னை அறிந்தால் படத்தின் மூலம் அறிமுகமானார். கெளதம் மேனன் இயக்கியிருந்த அந்தப் படத்தில் அஜித் ஹீரோவாக நடித்திருந்தார். அதையடுத்து மிருதன், விஸ்வாசம் ஆகிய படங்களில் நடித்தார் அனிகா. இவர் நடித்த ‘மா’ என்ற குறும்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த குறும்படம் தெலுங்கு மற்றும் தமிழில் வெளியானது. 18 வயதாகும் அனிகா தற்போது ஹீரோயினாகவும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். இன்ஸ்டகிராமில் படு ஆக்டிவாக இருக்கும் அவர், தற்போது கோட் - ஷூட்டில் எடுத்துக் கொண்ட படங்களை பகிர்ந்துள்ளார்.