நடிகை அனிகா சுரேந்திரன் தனது 18-வது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடியுள்ளார். 'என்னை அறிந்தால்’ மற்றும் விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களிலும் அஜித்தின் மகளாக நடித்த அனிகா சுரேந்திரன் ரசிகர்களிடம் நன்கு பரிச்சயமானார். கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கிய குயின் என்ற வலைத் தொடரில், இளம் வயது ஜெயலலிதாவாக உற்சாகமான நடிப்பை வெளிப்படுத்தினார். தவிர மிருதன், மாமனிதன் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்தார். மலையாளத்தில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார் அனிகா. இந்நிலையில் தற்போது அனிகா தனது 18-வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். குழந்தையாக பார்த்த அனிகாவுக்கு அதற்குள் 18 வயதாகி விட்டதா என ஆச்சர்யத்தில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.