நடிகை ஆண்ட்ரியா தற்போது மஞ்சள் நிற புடவையில் எடுத்துக் கொண்ட படங்களை தனது இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார். பிரபல பாடகியும், நடிகையுமான ஆண்ட்ரியா சமீபமாக பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் நடிப்பில் பிசாசு 2 திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அதோடு கா, மாளிகை, நோ எண்ட்ரி உள்ளிட்ட பல படங்களில் நடித்துக் கொண்டுள்ளார் ஆண்ட்ரியா. இன்ஸ்டகிராமில் ஆக்டிவாக இருக்கும் அவர், தொடர்ந்து தனது படங்களை அதில் பகிர்ந்துக் கொண்டு வருகிறார். இந்நிலையில் தற்போது மஞ்சள் புடவையில் எடுத்துக் கொண்ட படங்களைப் பகிர்ந்து, “நீங்கள் கேட்ட சேலை படம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.