முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » சிம்புவின் கம்பேக்கிற்கு ஒரே காரணம் இதுதான் - ஒரு இன்ஸ்பிரேஷன் ஸ்டோரி

சிம்புவின் கம்பேக்கிற்கு ஒரே காரணம் இதுதான் - ஒரு இன்ஸ்பிரேஷன் ஸ்டோரி

சிம்பு மாதிரி பிரச்னைகளை சந்தித்த பல நடிகர்கள் சினிமாவில் காணாமலேயே போயிருக்கிறார்கள். ஆனால் சிம்பு ஒவ்வொரு முறையும் மோசமான சூழ்நிலைகளை எதிர்கொண்டு தனது கம்பேக் கொடுத்து பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக இருந்துவருகிறார்.

  • 17

    சிம்புவின் கம்பேக்கிற்கு ஒரே காரணம் இதுதான் - ஒரு இன்ஸ்பிரேஷன் ஸ்டோரி

    சிம்புவின் பத்து தல இசை வெளியீட்டு விழா நேற்று யில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் பேசிய சிம்பு, ''இனி பெருசா பேசுறதுக்குலாம் ஒன்னும் இல்லைங்க செயல் மட்டும்தாங்க. ஒரு தடவ டிரான்ஸ்பர்மேஷன் பண்ணிட்டோம்னு விட்றாதீங்க. ஒவ்வொரு நாளும் நம்மள மாத்தி தான் ஆகணும்.

    MORE
    GALLERIES

  • 27

    சிம்புவின் கம்பேக்கிற்கு ஒரே காரணம் இதுதான் - ஒரு இன்ஸ்பிரேஷன் ஸ்டோரி

    இனிமே நீங்க சந்தோஷமா இருங்க. மத்ததெல்லாம் நான் பாத்துக்கிறேன். இனிமே நான் என்ன பண்றேனு மட்டும் பாருங்க. சாதாரணமா வரல. வேற மாறி வந்திருக்கேன். இனிமே உங்கள தலை குணிய விடமாட்டேன் என்று பேசியிருந்தார்.

    MORE
    GALLERIES

  • 37

    சிம்புவின் கம்பேக்கிற்கு ஒரே காரணம் இதுதான் - ஒரு இன்ஸ்பிரேஷன் ஸ்டோரி

    சிம்புவின் பேச்சு பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக இருந்தது. நடிகர் சிம்பு என்றாலே நினைவுக்கு வருவது அவரது எனர்ஜி. எவ்வளவு பெரிய ஸ்டெப் என்றாலும் ஈஸியாக நடனமாடக் கூடியவர். எவ்வளவு பெரிய காட்சி என்றாலும் அசால்டாக கையாளக் கூடியவர் என அவரை வைத்து படம் இயக்கிய இயக்குநர்கள் பலரும் தெரிவித்திருக்கின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக அவரது தன்னம்பிக்கை. வெற்றியோ தோல்வியோ ரசிகர்கள் அவரைத் தொடர்ந்து ரசிகர்கள் ஆதரிப்பதற்கு இதுதான் காரணம்.

    MORE
    GALLERIES

  • 47

    சிம்புவின் கம்பேக்கிற்கு ஒரே காரணம் இதுதான் - ஒரு இன்ஸ்பிரேஷன் ஸ்டோரி

    ஆனால் அவர் கடந்த 2016 முதல் 2020 வரையிலான ஆண்டுகள் அவருக்கு மோசமான காலகட்டம் என்றே சொல்ல வேண்டும். உடல் எடை மிகவும் அதிகரித்திருந்தார். ஷூட்டிங் வருவதில்லை. அன்பானவன், அடங்காதவன், அசராதவன் படத்துக்கு பாத்ரூமில் இருந்து டப்பிங் பேசினார் என அவரைப் பற்றிய ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    MORE
    GALLERIES

  • 57

    சிம்புவின் கம்பேக்கிற்கு ஒரே காரணம் இதுதான் - ஒரு இன்ஸ்பிரேஷன் ஸ்டோரி

    மாநாடு படத்தின் போது சிம்பு அளித்த பேட்டி ஒன்றில், ''செக்கச்சிவந்த வானம் படத்தில் ஓடும் காட்சியில் மிகவும் சிரமப்பட்டேன். அன்று இரவு என்னடா நம்மலாள ஓடக் கூட முடியல என அழுதேன். கட் பண்ணா மாநாடு படத்தில் ஏர் போர்ட் சீனில் நான் ஓடிவரும்போது இவங்களால என்ன பிடிக்க முடியல. அன்னைக்கு அவ்வளவு கஷ்டத்துலயும் ஒரு விஷயம்தான் தோணுச்சு. இல்லடா உன்னால வர முடியும் வந்துருவ நீ என பேசியிருந்தார்.

    MORE
    GALLERIES

  • 67

    சிம்புவின் கம்பேக்கிற்கு ஒரே காரணம் இதுதான் - ஒரு இன்ஸ்பிரேஷன் ஸ்டோரி

    ஈஸ்வரன் படத்தின் போது ஸ்லிம்மாகி வந்த சிம்பு மீண்டும் பத்து தல படத்துக்காக உடல் எடை அதிகரித்து நடித்திருந்தார். தற்போது தேசிங் பெரியாமி படத்துக்காக மீண்டும் படு ஸ்லிம்மாக காட்சியளிக்கிறார்.

    MORE
    GALLERIES

  • 77

    சிம்புவின் கம்பேக்கிற்கு ஒரே காரணம் இதுதான் - ஒரு இன்ஸ்பிரேஷன் ஸ்டோரி

    ஈஸ்வரன், மாநாடு, செக்கச் சிவந்த வானம், பத்து தல என தொடர்ச்சியாக படங்களில் நடித்துவருகிறார். தற்போதுவரை அவர் மீது எந்த குற்றச்சாட்டுகளும் இல்லை. சிம்பு மாதிரி பிரச்னைகளை சந்தித்த பல நடிகர்கள் சினிமாவில் காணாமலேயே போயிருக்கிறார்கள். ஆனால் சிம்பு ஒவ்வொரு முறையும் மோசமான சூழ்நிலைகளை எதிர்கொண்டு தனது கம்பேக் கொடுத்து பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக இருந்துவருகிறார். எல்லாம் மாறும் சரியாகும் என சிம்பு நம்பிக்கை வைத்து முயற்சித்தது தான் காரணம்.

    MORE
    GALLERIES