பாலிவுட் மூத்த நடிகர் அமிதாப் பச்சனின் பேத்தி, நவ்யா நவேலி விளம்பர படங்களில் நடிக்கப் போவதாக அறிவித்துள்ளார். அமிதாப் பச்சனுக்கு ஷ்வேதா மற்றும் அபிஷேக் பச்சன் என 2 குழந்தைகள் உள்ளனர். இவர்களில் மகள் ஷ்வேதா பச்சன் மாடலாகவும், பத்திரிகையாளர் மற்றும் தொழிலதிபராக இருந்து வருகிறார். ஷ்வேதாவின் மகள் நவ்யா நவேலி மாடலிங்கில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் விளம்பர படங்களில் நடிக்கப் போவதாக நவ்யா அறிவித்துள்ளார். நவ்யாவுக்கு பாலிவுட்டின் முன்னணி நடிகைகளான அனன்யா பாண்டே, ஷனாயா கபூர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நவ்யாவின் தம்பி அகஸ்தியா நந்தா, பிரபல இயக்குனர் ஸோயா அக்தர் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். விரைவில் பாலிவுட் படங்களிலும் நவ்யா இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.