முதல் மந்திரி ஹேமந்த் சோரனின் உரைக்குப் பிறகு நடன நிகழ்ச்சிக்காக அவர் அங்கு வந்திருந்தார். ஆனால் நிகழ்ச்சிக்கு வந்திருந்த போஜ்புரி நடிகையிடம் சிலர் தவறாக நடந்து கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தி அக்ஷாரா சிங்கை மீட்டனர். அவர் நிகழ்ச்சியை பாதியிலேயே ரத்து செய்து விட்டு திரும்பினார்.