துணிவு படத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ள புதிய ஸ்டில்கள் கவனம் ஈர்த்து வருகின்றன. நெகடிவில் ரோலில் துணிவு படத்தில் அஜித் நடித்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அஜித்துடன் மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கும் மஞ்சு வாரியர் துணிவு படத்தில் இடம்பெற்றுள்ளார். துணிவு படத்திற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது. இன்று வெளியான புதிய ஸ்டில் வைரலாகியுள்ளது. நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து அஜித்தின் துணிவு படத்தை ஹாட்ரிக்காக இயக்கியுள்ளார் எச். வினோத். போனி கபூர் தயாரித்துள்ள துணிவு படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். நடிகர் சமுத்திரக்கனி துணிவு படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்.