தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி நடிகர் அஜித் குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
2/ 10
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். ‘என் வீடு என் கணவர்’ என்கிற படத்தின் மூலம் அறிமுகமான இவர், காதல் கோட்டை, அவள் வருவாளா மற்றும் காதல் மன்னன் ஆகிய படங்களில் நடித்து இளைஞர்கள் மனதில் இடம் பிடித்தார்.
3/ 10
அதன் பிறகு 1999-ம் ஆண்டில் வெளிவந்த அமர்க்களம் திரைப்படத்தில் தனது ரூட்டை மாற்றி, ஆக்ஷன் ஹீரோவாக களம் இறங்கினார்.
4/ 10
அஜித்தின் மனைவி ஷாலினி குழந்தை நட்சத்திரமாக கிட்டத்தட்ட 50 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்.
5/ 10
இதையடுத்து மலையாளத்தில் வெளியாகிய ‘அனியாத பிறவு’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியானார்.
6/ 10
இயக்குநர் ஃபாசில் இயக்கிய இந்தப் படம் ‘காதலுக்கு மரியாதை’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. அதிலும் கதாநாயகியாக ஷாலினியே நடித்தார். இதன் மூலம் அவர் தமிழிலும் ஹீரோயினாக அறிமுகமானார்.
7/ 10
அந்தப் படம் மிகச் சிறந்த வெற்றி பெற்றது. இதையடுத்து அவருக்கு வாய்ப்புகள் குவிந்தன.
8/ 10
இதற்கிடையே 1999-ம் ஆண்டு அமர்க்களம் படப்பிடிப்பின் போது, படத்தின் ஹீரோ அஜித்துக்கும் ஷாலினிக்கும் காதல் ஏற்பட்டது. பின்னர் இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர்.
9/ 10
ஷாலினி அஜித் தம்பதிகளுக்கு அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் இருக்கிறார்கள்.
10/ 10
இந்நிலையில் அஜித் குடும்பத்துடன் தான் எடுத்துக் கொண்ட படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி. அந்தப் படம் தற்போது ரசிகர்களிடம் லைக்ஸை குவித்து வருகிறது.