ஐரோப்பாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அஜித்தின் லண்டன் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. நடிகர் அஜித் குமார் தொடர்பான பெரும்பாலான காட்சிகள் அவரது ஏகே. 61 படத்தில் ஷூட் செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் ஐரோப்பாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
2/ 7
லண்டன் வீதிகளில் சூப்பர் பைக்குடன் அஜித்குமார் இடம்பெறும் புகைப்படங்கள் சமூக வலைளதங்களில் வெளியாகியுள்ளன.
3/ 7
இந்நிலையில் லண்டனில் உள்ள பிரபல கார் நிறுவனமான மெக்லாரன் ஷோரூமுக்கு அஜித் சென்றுள்ளார். அங்கு சுமார் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள கார் உடன் அவர் நிற்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
4/ 7
இதனை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதேபோன்று கேஷுவல் லுக்கில் அஜித் இடம்பெறும் புகைப்படங்களும் வைரலாகி உள்ளன.
5/ 7
தனிப்பட்ட காரணங்களுக்காக ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. விரைவில் இந்த பயணத்தை முடித்துக்கொண்டு ஏகே. 61 படப்பிடிப்பில் அஜித் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
6/ 7
முன்னதாக தீபாவளி ரிலீஸ் செய் குறிவைத்து ஏகே 61 திரைப்படம் உருவாக்கப்பட்டு வந்தது. தற்போது படத்தின் வெளியீடு தள்ளிப் போகலாம் என்று தகவல்கள் வருகின்றன.
7/ 7
அஜித்துடன் இந்தப்படத்தில் அசுரனில் தனுசுக்கு ஜோடியாக நடித்த மஞ்சுவாரியர் நடிக்கிறார். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் ஏகே. 61 படம் உருவாகி வருகிறது.