ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » கமலுக்கு முன்பே இயக்குனருக்கு கார் பரிசளித்த அஜித்!

கமலுக்கு முன்பே இயக்குனருக்கு கார் பரிசளித்த அஜித்!

, 23 வருடங்களுக்கு முன் படத்தின் வெற்றியைப் பார்த்து அல்ல, படத்தின் பர்ஸ்ட் காப்பியைப் பார்த்து இயக்குநருக்கு கார் பரிசளித்திருக்கிறார் அஜித்.

 • 16

  கமலுக்கு முன்பே இயக்குனருக்கு கார் பரிசளித்த அஜித்!

  விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றிக்கு காரணமான இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு கமல்ஹாசன் விலையுயர்ந்த சொகுசு கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். இது மீடியாக்களில் பரபரப்பாக பேசப்பட்டது. ஒரு படம் வெற்றி பெறும்  போது அதன் தயாரிப்பாளர் அல்லது படத்தின் நாயகன் சம்பந்தப்பட்ட இயக்குநருக்கு கார் பரிசளிப்பது தமிழ் சினிமாவில் அடிக்கடி நடக்கும் நிகழ்வு. நடிகர் சூர்யா இயக்குநர் ஹரிக்கு அப்படி கார் பரிசளித்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 26

  கமலுக்கு முன்பே இயக்குனருக்கு கார் பரிசளித்த அஜித்!

  கொம்பன் படத்தின் வெற்றிக்காக தயாரிப்பாளர் அப்படத்தின் இயக்குநர் முத்தையாவுக்கு கார் பரிசளித்தார். அசுரன் படத்தின் வெற்றிக்காக கோடிகள் பெறும் விலையுயர்ந்த சொகுசுக் காரை தாணு வெற்றிமாறனுக்கு பரிசளித்தார். இந்தக் கலாச்சாரம் இன்று சாதாரணம். ஆனால், 23 வருடங்களுக்கு முன் கார் இத்தனை சகஜமாக பொதுமக்களால் பயன்படுத்தப்படவில்லை. அன்று அதுவொரு ஆடம்பரப் பொருள்.திரையுலகினரும் படத்தின் வெற்றிக்காக கார்களை பரிசளிக்கவில்லை.

  MORE
  GALLERIES

 • 36

  கமலுக்கு முன்பே இயக்குனருக்கு கார் பரிசளித்த அஜித்!

  அந்த காலகட்டத்தில் நடிகர் அஜித் இயக்குநர் ஒருவருக்கு கார் பரிசளித்தார். இத்தனைக்கும் அவர் அப்போது வளர்ந்து வரும் நடிகர்தான்.அஜித்தின் திரைவாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த படங்களில் ஒன்று ஆசை. அந்தப் படம் வெற்றி பெற்றாலும் பெயர் இயக்குநர் வஸந்திற்குதான் கிடைத்தது. அதில் வஸந்தின் உதவி இயக்குநராக எஸ்.ஜே.சூர்யா பணிபுரிந்தார். அப்போதே அவருக்கு அஜித் பழக்கம். அந்தக் காலகட்டத்திலேயே எஸ்.ஜே.சூர்யா வாலி படத்தின் கதையை அஜித்திடம் கூறியிருக்கிறார். கதைப் பிடித்துப்போக, கொஞ்சநாள் காத்திருக்கும்படி அஜித் கேட்டுக் கொண்டுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 46

  கமலுக்கு முன்பே இயக்குனருக்கு கார் பரிசளித்த அஜித்!

  ஆனால், உடனடியாக படத்தை தொடங்க முடியவில்லை. 1999ல் தான் வாலி படத்தை எடுக்க முடிந்தது. இந்தப் படம் ஆரம்பிக்கும் முன்பே எஸ்.ஜே.சூர்யாவுக்கு பைக் ஒன்றை பரிசளித்தார் அஜித். படப்பிடிப்பு முடிந்து வாலி பர்ஸ்ட் காப்பி பார்க்கிறார் அஜித். அப்போது எஸ்.ஜே.சூர்யா அருகில் இல்லை. அவருக்கு போன் செய்து என்ன கலர் பிடிக்கும் என கேட்கிறார் அஜித். எதுக்கு என்று கேட்க, சும்மா சொல்லு என்கிறார். உங்களுக்கு என்ன கலர் பிடிக்கும் என எஸ்.ஜே.சூர்யா அஜித்திடம் கேட்க, அவர் ஒயிட் என்று சொல்ல, எனக்கும் அதுதான் பிடிக்கும் என்கிறார்.

  MORE
  GALLERIES

 • 56

  கமலுக்கு முன்பே இயக்குனருக்கு கார் பரிசளித்த அஜித்!

  அதனைத் தொடர்ந்து வெள்ளை நிற சான்ட்ரோ காரை எஸ.ஜே.சூர்யாவுக்கு அஜித் பரிசளிக்கிறார். கவனிக்கவும்... படம் வெளியாகி வெற்றி பெற்ற பிறகு கார் பரிசளிக்கவில்லை, பர்ஸ்ட் காப்பி பார்த்துவிட்டு கார் பரிசளிக்கிறார். அப்போது அப்படி இயக்குநருக்கு கார் பரிசளிப்பது வழக்கமாக எல்லாம் இருக்கவில்லை.

  MORE
  GALLERIES

 • 66

  கமலுக்கு முன்பே இயக்குனருக்கு கார் பரிசளித்த அஜித்!

  வாலி வெளியான போது அஜித் கார் பரிசளித்தது பரபரப்பாக பேசப்பட்டது. சத்யராஜ் ஒரு படத்தில், நல்லா கதை சொல்றான், அப்படியே அவனுக்கு ஒரு கார் கிப்ட் பண்ணி பிடிச்சுப் போடு என இந்த நிகழ்வை கிண்டலும் செய்திருப்பார். படத்தின் வெற்றிக்காக இயக்குநருக்கு கார் பரிசளிப்பது சாதாரணமாகிவிட்டது. ஆனால், 23 வருடங்களுக்கு முன் படத்தின் வெற்றியைப் பார்த்து அல்ல, படத்தின் பர்ஸ்ட் காப்பியைப் பார்த்து இயக்குநருக்கு கார் பரிசளித்திருக்கிறார் அஜித். ஆச்சரியம்தான் இல்லை?

  MORE
  GALLERIES