முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » அஜித்தின் ஏகே61 ரிலீஸ், ஸ்ரீலங்காவில் சிவகார்த்திகேயனின் டான் உள்ளிட்ட முக்கிய சினிமா செய்திகள்!

அஜித்தின் ஏகே61 ரிலீஸ், ஸ்ரீலங்காவில் சிவகார்த்திகேயனின் டான் உள்ளிட்ட முக்கிய சினிமா செய்திகள்!

சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில் கடும் அரசியல் நெருக்கடிகளுக்கு இடையே இலங்கையில் வெளியாக உள்ளது.

 • 18

  அஜித்தின் ஏகே61 ரிலீஸ், ஸ்ரீலங்காவில் சிவகார்த்திகேயனின் டான் உள்ளிட்ட முக்கிய சினிமா செய்திகள்!

  வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் அஜீத் 61வது திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் 35 நாட்கள் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து விட்டதாகவும் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்த படப்பிடிப்பும் ஜூலை மாத இறுதிக்குள் நிறைவடையும் என தெரிவித்துள்ள அவர்,  நிச்சயம் இந்த திரைப்படம் எதிர்வரும் அன்று வெளியாகும் என உறுதி அளித்துள்ளார். மஞ்சுவாரியர் இந்த திரைப் படத்தில் அஜீத் ஜோடியாக நடித்து வரும் நிலையில் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

  MORE
  GALLERIES

 • 28

  அஜித்தின் ஏகே61 ரிலீஸ், ஸ்ரீலங்காவில் சிவகார்த்திகேயனின் டான் உள்ளிட்ட முக்கிய சினிமா செய்திகள்!

  பிரான்சில் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற கேன்ஸ் படவிழாவில் இந்திய பிரபலங்கள் குவிய தொடங்கியுள்ளனர் ஹிந்தி நடிகை தீபிகா படுகோன் நடிகை தமன்னா உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் பங்கேற்ற இந்த விழாவில் இயக்குனர் பா ரஞ்சித் பங்கேற்று தனது திரைப்பட அறிவிப்பை வெளியிட உள்ளார். இதற்காக விழா அரங்கத்திற்குள் நுழைந்த பா ரஞ்சித், அந்த புகைப்படங்களை சமூகவலைதளத்தில் உற்சாகத்துடன் பகிர்ந்திருக்கிறார். மாதவன் முதல் முறையாக இயக்கி நடித்துள்ள ராக்கெட்ரி திரைப்படம் இந்த விழாவில் முதல் முறையாக திரையிடப்பட உள்ளது

  MORE
  GALLERIES

 • 38

  அஜித்தின் ஏகே61 ரிலீஸ், ஸ்ரீலங்காவில் சிவகார்த்திகேயனின் டான் உள்ளிட்ட முக்கிய சினிமா செய்திகள்!

  ஹிந்தியில் வெளியாகி வெற்றிபெற்ற பதாய் ஹோ திரைப்படத்தின் தமிழ் பதிப்பாக உருவாகியுள்ள வீட்ல விசேஷங்க திரைப்படம் 17ஆம் தேதி ஜூன் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்ஜே பாலாஜி இயக்கி நடித்துள்ள இந்த திரைப்படத்தில் ஊர்வசி சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 48

  அஜித்தின் ஏகே61 ரிலீஸ், ஸ்ரீலங்காவில் சிவகார்த்திகேயனின் டான் உள்ளிட்ட முக்கிய சினிமா செய்திகள்!

  சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள DONதிரைப்படம் எதிர்வரும் 19ஆம் தேதி இலங்கையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் வெளியான எல்லா பகுதிகளிலும் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில் கடும் அரசியல் நெருக்கடிகளுக்கு இடையே இலங்கையில் வெளியாக உள்ளது.

  MORE
  GALLERIES

 • 58

  அஜித்தின் ஏகே61 ரிலீஸ், ஸ்ரீலங்காவில் சிவகார்த்திகேயனின் டான் உள்ளிட்ட முக்கிய சினிமா செய்திகள்!

  கன்னடத்தில் உருவாகி தமிழ் இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ள சார்லி 777 திரைப்படத்தின் முன்னோட்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. கிரன்ராஜ் இயக்கத்தில் ரக்ஷிட் ஷெட்டி நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் ஒரு நாய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. நாய்க்கும் கதாநாயகனுக்கும் இடையே உள்ள காட்சிகள் திரைப்படத்தில் சுவாரசியமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இந்த படத்தின் டிரைலர் ஏற்படுத்தியுள்ளது.

  MORE
  GALLERIES

 • 68

  அஜித்தின் ஏகே61 ரிலீஸ், ஸ்ரீலங்காவில் சிவகார்த்திகேயனின் டான் உள்ளிட்ட முக்கிய சினிமா செய்திகள்!

  நெல்சன் இயக்கத்தில் SJ சூர்யா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற மான்ஸ்டர் திரைப்படம் வெளியாகி மூன்று ஆண்டுகள் நிறைவடைந்ததை படக்குழுவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ஒரு எலியை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாகி இருந்தது. ராஜமவுலி இயக்கத்தில் வெளியான நான் ஈ திரைப்படம் ஒரு ஈ யை மையப்படுத்தி உருவாகி இருந்தது போல இந்த திரைப்படத்தின் கதை ஒரு எலியை மையப்படுத்தி உருவாகி இருந்தது என விமர்சனங்களை பெற்றது.

  MORE
  GALLERIES

 • 78

  அஜித்தின் ஏகே61 ரிலீஸ், ஸ்ரீலங்காவில் சிவகார்த்திகேயனின் டான் உள்ளிட்ட முக்கிய சினிமா செய்திகள்!

  சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் வள்ளிமயில் திரைப்படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் நடைபெற்று வருகிறது. விஜய் ஆண்டனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த திரைப்படத்தில் பாரதிராஜா சத்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். 1980களில் நடைபெற்ற ஒரு உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி இந்த திரைப்படத்தை சுசீந்திரன் உருவாக்கி வருகிறார்.

  MORE
  GALLERIES

 • 88

  அஜித்தின் ஏகே61 ரிலீஸ், ஸ்ரீலங்காவில் சிவகார்த்திகேயனின் டான் உள்ளிட்ட முக்கிய சினிமா செய்திகள்!

  நடிகர் அமீர் கான் மகளான ஐராகான் பிகினி உடையில் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக தளத்தில் வெளியாகி கடுமையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தற்போது தன்னை விமர்சித்தவர்களை சுட்டிக் காட்டி மேலும் பல பிகினி புகைப்படங்களை வெளியிட்டு உள்ளர். தனது உடை குறித்து கேள்வி எழுப்புவார்கள் இப்படித்தான் பதிலளிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

  MORE
  GALLERIES