இளையராஜா - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சந்திப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவரது கணவர் தனுஷை கடந்த ஜனவரி மாதம் பிரிந்தார். இதையடுத்து ஐஸ்வர்யா மியூசிக் வீடியோ இயக்குவதில் தனது கவனத்தை செலுத்தினார். அவர் இயக்கிய பயணி என்ற மியூசிக் வீடியோ சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் இந்திப்படம் குறித்த அறிவிப்பு வெளியானது. அந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைப்பதாக தகவல் வெளியானது. தற்போது அதனை உறுதி செய்யும் விதத்தில் இளையராஜாவுடனான புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா.