வாய்ப்பு கிடைத்தால் நடிகர் பிரபாஸை திருமணம் செய்துகொள்ளத் தயார் என்று பிரபல இந்தி நடிகை கிரீத்தி சனோன் அறிவித்துள்ளார். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக கிரீத்தி சனோன் இருந்து வருகிறார். பிரபாஸுடன் இணைந்து ஆதிபுருஷ் படத்தில் அவருக்கு ஜோடியாக கிரீத்தி நடித்திருக்கிறார். ஆதிபுருஷ் படத்தில் இருவரின் கெமிஸ்ட்ரி சிறப்பாக உள்ளதென தகவல்கள் வெளிவந்துள்ளன. சமீபத்தில் அளித்த பேட்டியில் வாய்ப்பு கிடைத்தால் பிரபாஸை திருமணம் செய்து கொள்ள தயார் என்று கிரீத்தி கூறியுள்ளார். பிரபாஸ் – கிரீத்தி சனோன் ஆகியோர் டேட்டிங்கில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கிரீத்தியின் அறிவிப்பு பாலிவுட் மற்றும் தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கிரீத்திக்கு ஏற்ற இளவரசன் அவர் வாழ்வில் வந்து விட்டதாக பிரபல நடிகர் வருண் தவான் கூறியிருந்தார். அவர் பிரபாஸைத்தான் கூறுவதாக சினிமா ரசிகர்கள் கமென்ட் செய்து வருகின்றனர். ஜனவரி மாதம் வெளியாக வேண்டிய ஆதிபுருஷ் திரைப்படம் கிராபிக்ஸ் பிரச்னை காரணமாக ஜூன் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.