விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ள 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் வெளியாகி பெரும் சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. சட்ட ஒழுங்கு பிரச்னை மற்றும் படத்துக்கு வரவேற்பு இல்லாத காரணத்தால் இந்தப் படம் திரையிடப்படாது என தமிழ்நாடு மல்டிபிளக்ஸ் திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்தனர். மேற்கு வங்க மாநிலத்தில் இந்தப் படம் தடைசெய்யப்பட்டது.
இதனை ஒப்புக்கொள்ளும் வகையில், 32 ஆயிரம் பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டதற்கு உரிய ஆதாரம் இல்லை என்று படத்தின் தயாரிப்பாளர் தரப்பிலும் கூறப்பட்டது. இது புனையப்பட்ட கதை என்றும் படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்தார். இதனை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், திரைப்படம் தொடங்கும் போது, இது புனையப்பட்ட கதை என்பதை குறிப்பிடுமாறு உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் இந்தப் படத்தில் முதன்மை வேடத்தில் நடித்துள்ள அதா சர்மா சமீபத்தில் ஒரு பேட்டியில் தி கேரளா ஸ்டோரி படத்தில் பாலியல் வன்கொடுமை சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம்பெற்றிருப்பதால் இந்தப் படத்தை தனது பாட்டிக்கு காட்ட பதட்டமாக இருந்தது. அதனைப் பார்த்து அவர்கள் எப்படி எடுத்துக்கொள்வரார்கள் என பயந்தேன்.
ஆனால் படம் பார்த்த என் பாட்டி இந்தப் படம் நிறைய நல்ல கற்பிக்கக் கூடிய தகவல் இருக்கிறது. இந்தப் படத்த என் மாணவர்கள் பார்க்க வேண்டும் என்றார். அதற்கு நான் இது வயதுவந்தோருக்கான படம் என விளக்கமளித்தேன். இதனையடுத்து பதிலளித்த எனது பாட்டி, இந்தப் படம் U/A சான்றிதழ் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். அதனால் இளம் பெண்கள் இந்தப் படத்தைப் பார்த்து விழிப்புடன் இருக்க உதவும் என்றார்.