நடிகர் விக்ரமின் ஜெமினி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான கிரண், முதல் படத்திலேயே ரசிகர்களை வெகுவாக ஈர்த்தார். தொடர்ந்து, வெளியான நடிகர் அஜித்தின் வில்லன், நடிகர் கமல்ஹாசனின் அன்பே சிவம், நடிகர் பிரசாந்தின் வின்னர் என அனைத்து ஹிட் படங்களிலும் நடித்து அந்த சமயத்தில் முன்னணி கதாநாயகியாக வளம் வந்தார்.