நடிகை வித்யுலேகா ராமன் ’நீ தானே என் பொன்வசந்தம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் துணை நடிகையாக அறிமுகமானார். நடிகை வித்யுலேகா ராமன் நடிகரும், எழுத்தாளருமான மோகன் ராமனின் மகளாவார். வித்யுலேகா ஜில்லா, வீரம் , புலி, வேதாளம் என தமிழ் சினிமா முன்னணி நடிகர்களான விஜய், அஜித்துடன் இணைந்து நடித்தார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார் வித்யுலேகா. அதிக உடல் எடையுடன் இருந்த வித்யுலேகா உடல் எடையை குறைக்கும் முயற்சியில் உள்ளார். நடிகை வித்யுலேகா இந்த ஆண்டு சஞ்சய் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.அவர்களின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருக்கும் வித்யுலேகா இந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்திற்கு கீழே’ Getting there. slowly but surely' என்றும் பதிவிட்டுள்ளார். 2016 ஆம் ஆண்டு வெளியான சரவணன் இருக்க பயமேன் படத்திற்கு பிறகு நேரடி தமிழ் படத்தில் வித்யுலேகா நடிக்கவில்லை. இந்நிலையில் நடிகை வித்யுலேகாவின் பிகினி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.