சின்னத்திரை மூலம் அறிமுகமான வாணி போஜனுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வ மகள் சீரியல் மூலம் வாணி போஜன் பிரபலமானார். அதையடுத்து லட்சுமி வந்தாச்சு சீரியலில் நடித்தார். அதையடுத்து Kings of comedy season 2 நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார். 2020 ஆம் ஆண்டு வெளியான ‘ ஓ மை கடவுளே’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே மீரா என்ற கதாபாத்திரம் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். லாக் அப், மலேசியா டூ அம்னீசியா ஆகிய படங்களில் நடித்தார். தற்போது கேசினோ, பகைவனுக்கு அருள்வாய், பாயும் ஒளி நீ எனக்கு என பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியான ‘Triples' வெப் சீரிஸில் நடித்து பாராட்டுக்களை பெற்றார். நடிகை வாணி போஜன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ.. நடிகை வாணி போஜன் ( Image : Instagram @vanibhojan_) நடிகை வாணி போஜன் ( Image : Instagram @vanibhojan_)