ஆடைகளுடன் நடமாட தடை உள்ள பகுதியில், அளவுக்கு அதிகமான கவர்ச்சியுடன் டிரஸ் அணிந்து வீடியோ ஷூட் செய்துள்ள நடிகை உர்பி ஜாவேத் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
2/ 24
மும்பையில் இந்தி பிக் பாஸ் புகழ் உர்பி ஜாவேத் தனது வித்தியாசமான பேஷன் ஆடைகளுக்காக பிரபலமானவர். அவருடைய தனித்துவமான ஆடைகள் பெரும்பாலும் ஆச்சரியப்படவைக்கும்.
3/ 24
கயிறுகள், கம்பிகள், கற்கள், உடைந்த கண்ணாடிகள், பூ இதழ்கள் போன்றவற்றைத் தேர்ந்தெடுத்து தனது உடலை மறைத்து புகைப்படங்களாக வெளியிடுவார்.
4/ 24
இப்படித்தான் ஒருமுறை, வெறும் கலர் நிற நூலை மட்டும் உடம்பில் சுற்றிக் கொண்டு வந்து நின்று போஸ் தந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
5/ 24
இந்நிலையில் உர்பி துபாய் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
6/ 24
மருத்துவமனையில் இருந்தபடி உர்பியே ஒரு வீடியோவையும் பதிவிட்டிருந்தார்.
7/ 24
குரல்வளை அழற்சி பாதிப்பு காரணமாக, சிகிச்சை பெறுவதாகவும் அவர் கூறியிருந்தார்.
8/ 24
அந்த வீடியோவிலிருந்து எடுக்கப்பட்ட அவரது போட்டோக்களும், சமூக வலைதலங்களில் வைரலாகி வருகின்றன.
9/ 24
அந்த வீடியோவில் அவர் பேசும்போது, உர்பி ஜாவேத்தின் குரல் பாதிக்கப்பட்டிருப்பதும், அவருக்கு குரல்வளை அழற்சி பாதிப்பு ஏற்பட்டிருப்பதும் தெரியவருகிறது.
10/ 24
அவருக்கு பின்னால் டாக்டர் நிற்கிறார். அவருடன் உர்பி பேச முயல்கிறார். ஆனால் அவரால் பேசமுடியவில்லை.
11/ 24
உர்பியின் மருத்துவமனை போட்டோக்களை பார்த்து அவரது ரசிகர்கள் மிகவும் கவலையடைந்துள்ளனர்.
12/ 24
விரைவில் குணமாகவேண்டுமென அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்தபடி உள்ளனர்.
13/ 24
இந்நிலையில், துபாய் போலீசாரால் உர்பி கைதானார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.
14/ 24
தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்துக்காக துபாயில் ஒரு வீடியோவை எடுத்துள்ளார்.
15/ 24
அவர் அணிந்திருந்த "டிரஸ்ஸில்" வழக்கம்போல் சர்ச்சை இருந்தாலும், அவர் அந்த வீடியோவை எங்கு எடுத்தார் என்பதுதான் சிக்கலாகி உள்ளது.
16/ 24
துபாயில் கவர்ச்சிகரமான ஆடைகளுடன் நடமாட தடை உள்ள பகுதியில், அளவுக்கு அதிகமான கவர்ச்சியுடன் டிரஸ் அணிந்து வீடியோ ஷூட் செய்துள்ளார்.
17/ 24
இதுகுறித்த புகார் போலீசுக்கு பறந்த நிலையில், துபாய் போலீசார் அவரை கைது செய்ததாக கூறப்படுகிறது.
18/ 24
எப்போதுமே பரபரப்புக்காக எதையும் செய்யக்கூடிய உர்பி இந்த வீடியோவையும் பரபரப்புக்காக வேண்டுமென்றே ஷூட் செய்தாரா? அல்லது அந்த இடம் தடை செய்யப்பட்ட பகுதி என்பது உண்மையிலேயே உர்பிக்கு தெரியவில்லையா? என தெரியவில்லை.
19/ 24
எந்த ஆபாசம் உர்பியை உச்சத்துக்கு கொண்டு போனதோ, அதே ஆபாசம் தான், இன்று ஜெயில் வரை கொண்டுபோய் விட்டுள்ளதாக தெரிகிறது.
20/ 24
இதுகுறித்து பேசியுள்ள உர்பி தன்னுடைய ஆடைக்காக தான் கைது செய்யப்படவில்லை என்றும் தடைவிதிக்கப்பட்டுள்ள பகுதியில் இருந்து வீடியோ வெளியிட்டதற்காகதான் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
21/ 24
இந்நிலையில், உர்பிக்கு கொலை மிரட்டல் விடுத்த பிஹாரை சேர்ந்த நவீன் என்ற இளைஞரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.
22/ 24
உர்பியை செல்போனில் தொடர்பு கொண்ட நவீன், பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்போவதாக தெரிவித்துள்ளார்.
23/ 24
மேலும் தொடர்ந்து ஆபாச எஸ்.எம்.எஸ்.களையும் உர்பிக்கு அனுப்பியுள்ளார்.
24/ 24
இதுகுறித்து மும்பை போலீசில் உர்பி கொடுத்த புகாரின்பேரில் நவீனை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.