நடிகை த்ரிஷா சினிமாவுக்கு வந்து 20 ஆண்டுகளை கடந்துள்ளார்.
2/ 10
அமீர் இயக்கத்தில் சூர்யா நடித்த 'மௌனம் பேசியதே' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான த்ரிஷா, நேற்றுடன் திரையுலகில் 20 வருடங்களை நிறைவு செய்துள்ளார்.
3/ 10
சூர்யா, த்ரிஷா மற்றும் நந்தா நடித்த அந்தப் படம், டிசம்பர் 13, 2002 அன்று வெளியானது.
4/ 10
இதையடுத்து தனது படங்கள் அடங்கிய 20 வடிவிலான ஃப்ரேமை சமூக வலைதளங்களில் பகிர்ந்துக் கொண்டார் த்ரிஷா.
5/ 10
சுவாரஸ்யமாக, 1999-ல் பிரசாந்த் & சிம்ரன் நடித்த 'ஜோடி' படத்தில் த்ரிஷா நடித்திருந்தார்.
6/ 10
மெளனம் பேசியதே படத்தில் அறிமுகமான த்ரிஷா, 'சாமி', 'லேசா லேசா', 'கில்லி', 'திருப்பாச்சி', 'ஆறு' மற்றும் 'விண்ணைத்தாண்டி வருவாயா' போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்தார்.
7/ 10
கோலிவுட்டின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிலம்பரசன் ஆகியோருடன் நடித்துள்ளார்.
8/ 10
கடைசியாக மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருந்தார் த்ரிஷா.
9/ 10
அதோடு பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார்.
10/ 10
சினிமாவில் 20 ஆண்டுகளைக் கடந்த த்ரிஷாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.