நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். ஹிந்தியில் தான் தற்போது படங்கள் நடித்து வருகிறார். 2006 ஆம் ஆண்டு கேடி படம் மூலம் தமன்னா தமிழில் அறிமுகமானார்.அதையடுத்து கல்லூரி படம் மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள். அதையடுத்து தொடர்ந்து அயன், சுறா என முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார். 2013 ஆம் ஆண்டு வெளியான வீரம் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்தார். தற்போது வேதாளம் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.அதுமட்டுமில்லாமல் ஹிந்தியிலும் 2 படங்களில் நடித்து முடித்துள்ளார். தமன்னா கடைசியாக தமிழில் 2019 ஆம் ஆண்டு வெளியான ஆக்ஷன் படத்தில் நடித்திருந்தார். அதன் பின்பு எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. நடிகை தமன்னாவிற்கு இன்ஸ்டாகிராமில் 16 மில்லியன் பின்தொடர்பாளர்கள் உள்ளனர். நடிகை தமன்னா இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ.. நடிகை தமன்னா ( Image : Instagram @tamannaahspeaks) நடிகை தமன்னா ( Image : Instagram @tamannaahspeaks)