தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் படங்களில் நடிகை தமன்னா பாட்டியா நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் பாலிவுட்டில் 'பாப்லி பவுன்சர்' என்ற படத்தில் நடித்தார். இதில் அவர் பெண் பவுன்சர் வேடத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் படத்தில் படமாக்கப்பட்ட அந்தரங்க காட்சிகளை (Tamanna Bhatia Intimate Scenes) வெளிப்படையாக பேசி உள்ளார்.
தமன்னா பாட்டியா சமீபத்தில் இந்தி படமான 'பாப்லி பவுன்சர்' மற்றும் தெலுங்கு படமான 'குர்துண்டா சீதகாலம்' ஆகியவற்றில் நடித்து இருந்தார். இந்த படத்தில், நடிகைக்கும் அவரது சக நடிகருக்கும் இடையே குளியலறையில் சில நெருக்கமான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன, அதைப் பற்றி அவர் இப்போது தனது பேட்டியில் பேசியுள்ளார் மற்றும் அந்த நேரத்தில் ஆண் நடிகர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்.
நெருக்கமான காட்சி மற்றும் ஆண் நடிகர்களின் உணர்வுகள் குறித்து தமன்னா கூறுகையில், அந்தரங்க காட்சிகளை நடிகர்கள் அதிகம் விரும்புவதில்லை. மாறாக நடிகையை விட அவர்கள் பதட்டமாகவும், சங்கடமாக இருப்பதை நான் பார்த்து இருக்கிறேன். அவர்கள் பெண் நடிகை என்ன நினைப்பார்கள் என்று கவலைப்படுவார்கள். இதெல்லாம் மிகவும் விசித்திரமாக இருக்கும். நடிகர்கள் மனதில் பல கேள்விகள் இருக்கும் என்றும் தெரிவித்தார்.