தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா திரைத்துறையில் 18 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். 18 ஆண்டுகளாக சினிமாவில் நீடித்திருக்கும் தமன்னாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. 2005 ஆம் ஆண்டும் மார்ச் 4 ஆம் தேதி வெளியான சாந்த்சா ரோஷன் ஷெஹ்ரா என்ற இந்தி படத்தின் மூலம் தமன்னா திரைத்துறையில் அறிமுகம் ஆனார். தமிழில் அவர் அறிமுகமான கேடி என்ற திரைப்படம் 2006 செப்டம்பர் 24 ஆம் தேதி வெளியானது. விஜய்யுடன் சுறா, அஜித்துடன் வீரம், சூர்யாவுடன் அயன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். படிக்காதவன், பையா படங்களில் தமன்னாவின் நடிப்பு கவனம் ஈர்த்தது. பாகுபலியில் பிரபாசுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் இந்திய அளவில் தமன்னா பிரபலம் அடைந்தார். தெலுங்கிலும் ஏராளமான வெற்றிப் படங்களில், முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் தமன்னா. சினிமாவில் 18 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது மன நிறைவாக இருப்பதாகவும், தான் முதிர்ச்சி பெற்றுள்ளதாகவும் தமன்னா கூறியுள்ளார். ரசிகர்கள் தன் மீது அதிக அன்பு செலுத்துவாக கூறியுள்ள தமன்னா, அவர்களின் ஆதரவை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.